தீபாவளி வாழ்த்து சொன்னது ஒரு குத்தமாய்யா... ஷாரூக்கானை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...!

By Manikandan S R SFirst Published Oct 29, 2019, 11:18 AM IST
Highlights

பண்டிகை மற்றும் முக்கிய தினங்களில் பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களையும், புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வது நடைமுறை வழக்கம் தான் என்றாலும், ஷாரூக்கான் போட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று அவரது ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளது.

தீபாவளி வாழ்த்து சொன்னது ஒரு குத்தமாய்யா... ஷாரூக்கானை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...!

தீபாவளி வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டதற்காக பாலிவுட் முணி ன்னநடிகர் ஷாரூக்கானை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.நாடு முழுவதும் அக்டோபர் 27ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்கு முன்னதாக திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சோசியல் மீடியா மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். பண்டிகை மற்றும் முக்கிய தினங்களில் பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களையும், புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வது நடைமுறை வழக்கம் தான் என்றாலும், ஷாரூக்கான் போட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று அவரது ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, தீபாவளி வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில் என்ன பிரச்னை வாழ்த்து தானே சொன்னாருன்னு நீங்க கேட்கலாம். பிரச்னை வாழ்த்து சொன்னதுல இல்ல, அவரு போட்ட போட்டோவில. ஏன்னா அந்த போட்டோவில் ஷாரூக்கான், அவரது மனைவி கவுரி, இளையமகன் ஆப்ராம் ஆகியோரது நெற்றில் சந்தனம், குங்கும திலகம் இருந்தது. <

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#HappyDiwali to everyone. May your lives be lit up and happy.

A post shared by Shah Rukh Khan (@iamsrk) on Oct 27, 2019 at 11:59am PDT

அவ்வளவு தான் கொதித்துப் போன நெட்டிசன்கள், நீங்க எல்லாம் ஒரு இஸ்லாமியரா, உலகத்திற்கு முன்பு போலி வேடம் போட்டு நடிக்கிறீங்க, உங்களால இஸ்லாம் மதத்துக்கே கேவலம் என கண்டபடி விளாசித் தள்ளிட்டு இருக்காங்க. இதனால் கடுப்பான பாலிவுட் நடிகை ஷாபானா ஆஸ்மி, ஷாரூக்கான் நெற்றில் திலகம் வைத்திருப்பதற்காக அவரை போலி முஸ்லீம் என்று விமர்சிப்பது அதிர்ச்சியாக உள்ளது என ஷாரூக்கிற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். ஷாரூக்கானின் மனைவி கவுரி ஒரு இந்து என்பதால், அவர்கள் வீட்டில் அனைத்து பண்டிகைகளும் கொண்டாடப்படுவது வழக்கம். அதனால் ஷாரூக்கான் எம்மதமும், சம்மதம் என்ற கருத்து கொண்டவர். ஆனால் அவரது கருத்திற்காக விமர்சிக்கப்படுவது இது முதல்முறையல்ல, ஏற்கெனவே விநாயகர் சதுர்த்தி கொண்டாடியதற்காக சோசியல் மீடியாவில் ஷாரூக் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 

click me!