
தமிழகத்தில் ஊழலற்ற நல்லாட்சி நடக்கவேண்டுமென்றால் கமல், ரஜினி, விஜயகாந்த் ஆகிய மூன்று பேருமே பா.ஜ.க. அணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கவேண்டும் என்று நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் சீரியஸாகக் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் சமீபகமாக தமிழகத்தில் நடைபெற்று வந்த இடைத் தேர்தல்களை ஊழல்களைக் காரணமாகக் காட்டி தவிர்த்து வருகிறார்.2021ல் தமிழக சட்டசபைக்குத் தேர்தல் வரும்போதும் எக்கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் அவர் தனித்து போட்டியிட விரும்புவதாகவே தெரிகிறது.
இந்நிலையில் சட்டமன்றத்தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ளவேண்டுமானால் டிடிவி தினகரனின் அமமுக உட்பட சில கட்சிகளுடன் கமல் கூட்டணி வைத்தே ஆகவேண்டும் என்று அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சொன்னதை அவர் ஏற்காததால்தான் கமலிடமிருந்து அவர் வெளியேறினார் என்பது தொடர்பான செய்திகளை தனது ட்விட்டர் பக்கத்தில் டேக் செய்த நடிகர் எஸ்.வி.சேகர், ‘கமல் ஊழல்கட்சிகளுக்குத் துணை போக விரும்பவில்லை என்று வரும் இந்த செய்திகள் உண்மையெனில் அவருக்கு எனது பாராட்டுகள். மேலும் தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டுமானால் கமல், ரஜினி, விஜயகாந்த் ஆகிய மூன்று பேருமே பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தேர்தலைச் சந்திக்கவேண்டும் என்று வெடிகுண்டு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.