திருமணமான நடிகருடன்... இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டாரா மைனா 'நந்தினி'..?

 
Published : Jan 01, 2018, 05:58 PM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
திருமணமான நடிகருடன்... இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டாரா மைனா 'நந்தினி'..?

சுருக்கம்

seriyal actress nandhini second marriage controversy

பிரபல தனியார் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'சரவணன் மீனாட்சி' தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை நந்தினி. இவர் ஏற்கெனவே நடிகர் அருள்நிதி அறிமுகமான வம்சம் படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தார். 

ஆனால் இவரை பிரபலமாக்கியது இந்த சின்னத்திரை தொடர் தான். இவர் ஒரு சில படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து இந்தத் தொலைக் காட்சி நடத்திய நடன நிகழ்ச்சியில் போட்டியாளராகவும், ஒரு காமெடி நிகழ்ச்சிக்கு நடுவராகவும் இருந்தார்.

இவர் கடந்த ஆண்டு கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களுடைய திருமணத்தில் நந்தினியின் பெற்றோருக்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. திருமணமான சில மாதங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த இவர்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்தனர். இதனால் நந்தினி தன்னுடைய பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். கார்த்தி தனியாக இருந்துள்ளார். ஒரு நிலையில் மன உளைச்சல் அதிகமாகி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். 

ஆனால் நந்தினி கணவர் இறந்த விஷயம் அறிந்தும் கூட கணவரின் உடலைப் பார்க்கச் செல்லவில்லை என ஒரு தரப்பினர் கூறி வந்தாலும், மற்றொரு தரப்பினர் நந்தினியை அவரது கணவரின் உடலைப் பார்க்க கார்த்தியின் உறவினர்கள் அனுமதிக்கவில்லை எனக் கூறினார்.

கார்த்தியின் மரணத்திற்குக் காரணம், நந்தினியின் தந்தை தான் எனக் கூறப்பட்டு வந்த நிலையில்... நந்தினியின் மாமியார் இவரைப் பற்றிய பல பகீர் தகவல்களை வெளியிட்டார். தொடர்ந்து நந்தினியும் அவருடைய பங்கிற்கு கார்த்தி, கடன் பெற்றிருந்ததாகவும், தன்னிடமும் நகை, பணத்தை வாங்கி ஏமாற்றியதாகவும் கூறினார்.

ஒரு வழியாக இந்தப் பிரச்சனைகள் முடிவிற்கு வந்தாலும் கணவர் இறந்து 6 மாதம் கூட ஆகாத நிலையில் பிரபல தொலைக்காட்சியில் இவர் மிகவும் மாடர்ன்னாக வந்து குத்தாட்டம் போட்டது அனைத்து தரப்பு ரசிகர்களையும் விமர்சிக்க வைத்தது.

இந்நிலையில் இவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள தயாராகிவிட்டதாக கிசுகிசுக்கப் படுகிறது. இவரும் இதே தொலைக்காட்சியில் தான் பணியாற்றி வருவதாகவும் அவருக்கு திருமணமாகி குழந்தைகளும் உள்ளதாகவும் கிசுகிசுக்கள் உலாவருகின்றன... ஆனால் இவை எல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்பதை மைனா தான் வெளிப்படையாகக் கூற வேண்டும்! 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

எடுப்பாக தெரிய... மார்பகத்தில் பேட் வைக்க சொல்வார்கள் - கசப்பான அனுபவத்தை பகிர்ந்த ராதிகா ஆப்தே
ஜனநாயகன் vs பராசக்தி : நன்றி மறந்தாரா சிவகார்த்திகேயன்..? சினிமாவிலும் விஜய்க்கு எதிராக நடக்கும் பாலிடிக்ஸ்