நியூ இயர் நைட்டு ஆகலாமா டைட்டு..."சிம்புவுடன் தூள் கிளப்பும் ஓவியா"..!

Asianet News Tamil  
Published : Jan 01, 2018, 05:11 PM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
நியூ இயர் நைட்டு ஆகலாமா டைட்டு..."சிம்புவுடன் தூள் கிளப்பும் ஓவியா"..!

சுருக்கம்

oviya sing new year song for simbu music

நடிகை ஓவியா தற்போதைய இளைஞர்களின் கனவுக்கன்னி என்று சொல்லும் அளவிற்கு பேவரைட் நடிகையாகி விட்டார். மேலும் இவருக்கு பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் என பலதரப்பட்ட ரசிகர்களும் உள்ளனர். 

இதனால் இவர் எது செய்தாலும் அது பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர் இந்த வருட புத்தாண்டை வரவேற்கும் விதத்தில், நடிகர் சிம்புவின் இசையில் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.  

இந்தப் பாடலின் ஆரம்பத்திலேயே... நிறுத்து நிறுத்து நிறுத்து எத்தன நாள் தான் நியூ இயர்க்கு இதே பாட்டு... எனக்கு புது பாட்டு வேணும் என கூறி ஓவியா இந்தப் பாடலை பாடத் துவங்குகிறார். நியூ இயர் நைட்டு... ஆகலாமா டைட்டு... என்றும்,  இனிய தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, இங்கிலீஷ் எல்லா உலக மக்களே 'Wish you happy new year' LET... GET...மரண மட்ட... என்ற வார்த்தைகளைக் கூறிய பின்.. 

'நியூ இயர் நைட்டு ஆகலாமா டைட்டு... இன்னைக்கு நைட்டு எல்லாமே ரைட்டு... என்று துவங்கும் பாடலைப் பாட துவங்குகிறார் ஓவியா,  நியூ இயர் ஸ்பெஷலாக  ஓவியா சிம்புவின் இசையில் பாடியுள்ள. இந்தப் பாடல் தற்போது சமூக வலைதளங்களில் பட்டையைக் கிளப்பி வருகிறது.

மேலும் சிம்பு இசையில் தற்போது வெளியாகியுள்ள படமான 'சக்க போடு போடு ராஜா' திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு  கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த பாடல் இதோ

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தனுஷ், சூர்யா, நயன்தாராவுக்கு தமிழக அரசு விருது.. அசுரன் முதல் கார்கி வரை.. விருதுகளை அள்ளிய படங்கள்! முழு லிஸ்ட்!
Mrunal Thakur : வசீகரிக்கும் தோரணையில் மிருணாள் தாகூர்.. மனதை திருடும் போட்டோஸ்