தானா சேர்ந்த கூட்டம் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்துக்கு பெயரே கிடையாது – கீர்த்தி சுரேஷ் பேட்டி 

 
Published : Jan 01, 2018, 03:38 PM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
தானா சேர்ந்த கூட்டம் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்துக்கு பெயரே கிடையாது – கீர்த்தி சுரேஷ் பேட்டி 

சுருக்கம்

keerthi suresh talking about thana serntha kootam

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளுக்கு டப் காம்பட்டிஷன் கொடுத்து நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் வருகிற பொங்கல் அன்று வெளியாகவுள்ள திரைப்படம் “ தானா சேர்ந்த கூட்டம் “ இந்த படத்தில் சூர்யாவுக்கு  ஜோடியாக நடித்துள்ளார். தானா சேர்ந்த கூட்டம் படத்தை பற்றியும் , தன்னுடைய கதாபாத்திரம் மற்றும் தன்னோட நடித்த நடிகர்கள் மற்றும் டெக்னிஷியன்ஸ் பற்றியும் கீர்த்தி சுரேஷ் பேட்டி அளித்துள்ளார்.

அதில் "தானா சேர்ந்த கூட்டம்" படத்தில் நான் பிராமண பெண் வேடத்தில் நடிக்கிறேன். படத்தில் என்னுடைய கதாபாத்திரத்துக்கு பெயரே கிடையாது. நான் ஹுமர் கலந்த சஸ்பன்ஸ் வேடத்தில் நடிக்கிறேன். முதலில் இந்த படத்தின் கதையை இயக்குநர் விக்னேஷ் சிவன் சொல்லும் போதே எனக்கு என்னுடைய கதாபாத்திரமும் மிகவும் பிடித்திருந்தது.

பள்ளி பருவத்திலேயே நான் சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை. என்னுடைய அம்மா சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமாருடன் மூன்று படத்தில் நடித்துள்ளார். நான் ஸ்கூல் படிக்கும் போது நான் சிவகுமார் சாரின் மகன் சூர்யாவுடன் ஒரு நாள் கதாநாயகியாக நடிப்பேன் என்று கூறியிருந்தேன். அது இன்று நிஜமாகியுள்ளது எனக்கு மகிழ்ச்சி. சூர்யா சார் மிகவும் அமைதியானவர். அதிகம் பேசமாட்டார். ஆனால் அவரிடம் நான் சந்தேகம் கேட்கும் போது எனக்கு சொல்லிகொடுத்து உதவுவார்.

செந்தில் சாரோட நடித்தது ஒரு நல்ல அனுபவம். அவர் Teddy Bearரை போல கியூட் ஆனா மனிதர். அவரோடு நடித்தது எனக்கு மறக்க முடியாத நல்ல அனுபவம். ரம்யா கிருஷ்ணன் அவர்கள் அம்மாவின் தோழி. எனக்கு அவங்களை சின்ன வயதிலிருந்தே தெரியும். பாகுபலி வெளியான நேரத்தில் அவங்களோடு நடித்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது. 

இயக்குநர் விக்னேஷ் சிவன் எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து தான் வசனத்தை கூறுவார். அதை நாங்கள் அங்கே டெவெலப் செய்து நடிப்போம். அப்படி நடிக்கும் போது அது சிறப்பாக இருக்கும். அனிருத் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. 3 பாடல்கள் தற்போது சிங்கிளாக வெளிவந்து மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது சந்தோஷமாகவுள்ளது என்றார் கீர்த்தி சுரேஷ்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்