திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த மொத்த பணத்தையும் கொரோனா நிவாரண நிதிக்கு கொடுத்த பிரபல நடிகை...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Apr 18, 2020, 12:03 PM ISTUpdated : Apr 18, 2020, 12:06 PM IST
திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த மொத்த பணத்தையும் கொரோனா நிவாரண நிதிக்கு கொடுத்த பிரபல நடிகை...!

சுருக்கம்

இந்நிலையில் தெலுங்கு, இந்தி, பெங்காலி டி.வி. சீரியல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த பூஜா பானர்ஜி செய்துள்ள வித்தியாசமான காரியம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்த பொழுதே உச்ச நட்சத்திரங்கள் முதல் தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள் என பலரும்  லட்சங்களிலும், கோடிகளிலும் அள்ளிக்கொடுத்தனர். பல திரைப்பிரபலங்கள் கூட பிரம்மாண்டமாக நடைபெறவிருந்த தங்களது திருமணத்தை ரத்து செய்தனர். 

இந்நிலையில் தெலுங்கு, இந்தி, பெங்காலி டி.வி. சீரியல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த பூஜா பானர்ஜி செய்துள்ள வித்தியாசமான காரியம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இங்க எப்படி ராஜா ராணி சீரியலில் நடித்த சஞ்சீவ் - மானசா ஜோடி காதலித்து திருமணம் செய்து கொண்டனரோ, அதேபோல் பூஜா பானர்ஜி, சீரியல் நடிகரான குணால் வர்மாவை காதலித்து வந்தார்.

இதையும் படிங்க: ஆடையில்லாமல் தலையணையை மட்டும் கட்டிக்கொண்டு ஹாட் போஸ்... வைரலாகும் இளம் நடிகையின் சேலஞ்ச்...!

இருவீட்டாரும் காதலை ஏற்றுக்கொண்ட நிலையில் தமிழ் புத்தாண்டிற்கு மறுநாளான ஏப்ரல் 15ம் தேதி தடபுடலாக திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள பூஜா, இன்று எங்களது திருமணம் நடத்திருக்க வேண்டியது. ஆனால் தற்போதைய சூழ்நிலையால் நடக்கவில்லை. நாங்கள் ஒரு மாதத்திற்கு முன்பே அதிகாரப்பூர்வ பதிவுத்திருமணம் செய்து கொண்டோம். தற்போது கணவன், மனைவியாக வாழ்க்கையை தொடங்கிவிட்டோம்.

 

இதையும் படிங்க: “என் புருசனை திருடிய நயன்தாராவை எங்கு பார்த்தாலும் உதைப்பேன்”... பிரபுதேவா மனைவி ஆவேசம்...!

அதனால் ஆடம்பரமாக நடக்க வேண்டிய திருமணத்தை ரத்து செய்துவிட்டோம். எங்களது பெற்றோர்கள் மற்றும் தாத்தா, பாட்டி ஆகியோரின் ஆசியோடு புதுவாழ்க்கையை தொடங்கிவிட்டோம். உங்களுடைய வாழ்த்துக்கள் எங்களுக்கு தேவை. அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறோம். எங்களது திருமணத்திற்காக வைத்திருந்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு கொடுக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார். நடிகை பூஜா பானர்ஜியின் இந்த பதிவிற்கு திரைப்பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நிவேதா பெத்துராஜ் - ரஜித் திருமணம் நிறுத்தம்? இன்ஸ்டாவில் போட்டோஸை நீக்கியதால் டவுட்டோ டவுட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஹைலைட்ஸ்: ராஜீ முதல் தங்கமயில் வரை இன்றைய அப்டேட்ஸ்!