தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு திட்டமிட்ட கொலை...! காக்கி உடை அணிய கேவலமா இருக்கு...! கண்ணீருடன் பேசிய சீரியல் நடிகை நிலாநி நிலா...!

 
Published : May 23, 2018, 02:04 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு திட்டமிட்ட கொலை...! காக்கி உடை அணிய கேவலமா இருக்கு...! கண்ணீருடன் பேசிய சீரியல் நடிகை நிலாநி நிலா...!

சுருக்கம்

serial actress nilaanilala about thoothukudi sterlite problem

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பொதுமக்கள் 10-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக  உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த நிலையில் சின்னத்திரை நடிகையான நிலானிநிலா, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகை நிலாநி நிலா, படிப்பிடிப்புக்கு நடுவே காக்கி உடை அணிந்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இந்த சீருடையை அணிந்திருப்பதற்கு மிகவும் கேவலமாக இருக்கிறது. அப்பாவி மக்களை சாகடித்துள்ளார்கள். சத்தியமாக நான் ஷீட்டிங்கில் இருந்தேன். என்னால தவிர்க்க முடியவில்லை. இல்லையென்றால் நான் தூத்துக்குடியில் இருந்திருப்பேன். எந்த போராட்டம் நடத்தினாலும் போலீசாருக்கு முதலில் சுடுவதற்கான அதிகாரம் கிடையாது. முதலில் தண்ணீரால் துரத்தி அடித்திருக்க வேண்டும். பின்னர் கண்ணீர் புகைக்குண்டு போட்டியிருக்க வேண்டும். அதையும் மீறி நடந்தால் ரப்பர் புல்லட்டால் காலுக்கு கீழே சுட்டிருக்க வேண்டும். இதில் எதையாவது பின்பற்றியிருக்கிறார்களா?

எடுத்த எடுப்பிலேயே நெஞ்சில் குறி வைத்து சுடுவதற்கு யார் அதிகாரம் கொடுத்தது? இந்த சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. துப்பாக்கிச் சூட்டில் இறந்த 8 பேர், இந்த போராட்டத்தை ஆரம்பித்து வழி நடத்தி வந்தவர்கள். ஆகையால் இது திட்டமிட்ட கொலை. போராட்டத்தின்போது தற்செயலாகநடந்தது இல்லை. இன்று அவர்கள், நாளை நாம்தான். இதை யாருமே கேட்கவில்லையென்றால் நாம் நல்லாயிருப்போமா என்றால் கண்டிப்பாக கிடையாது.  நமது வளங்களை சுரண்டிவிட்டார்கள்… நீரை சுரண்டிவிட்டார்கள்… நம் மண்வளம் உள்பட எதுவும் நம்மிடம் இல்லை.

நம்மை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். போராளிகளாக, தீவிரவாதிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஐ.டி. துறையில் வேலை செய்பவர்கள், காரில் சொகுசாக போகிறவர்களெல்லாம் கீழே இறங்கி வாங்க. உங்களோட வாழ்க்கைக்கும் சேர்ந்துதான் நாங்களெல்லாம் போராடிக் கொண்டிருக்கிறோம். இலங்கையில்என்ன நடந்ததோ அது தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. இன்னொரு பாலச்சந்திரனையும், இசைப்பிரியாவையும் இழக்க வேண்டாம் என்று நடிகை நிலானி நிலா காட்டமாக அதில் பதிவிட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'கையெடுத்து கும்புடுறேன்;இப்படி செய்யாதீர்கள்' - ஸ்ரீலீலா மனம் திறந்து வேண்டுகோள்!
9-ல் 8 படங்கள் தோல்வி.. பான் இந்தியா ஸ்டார் தான் கடைசி நம்பிக்கை!