
பிரபல சின்னத்திரை நடிகர் கவுதம் டே, புற்று நோய் காரணமாக மரணமடைந்துள்ளது, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ராஜா, ராணி ராஷ்மோனி போன்ற பெங்காலி தொடர்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் கெளதம் டே. 65வது வயதாகும் இவர் ஒரு சில பெங்காலி மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
கவுதம் டே, சில வருடங்களாகவே புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், மருத்துவமணையில் இதற்கான சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி கவுதம் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இவருக்கு மனைவியும், மகளும் உள்ளனர்.
கவுதமின் மறைவு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் இவருடைய மறைவிற்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்ததோடு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.