
சமீப காலமாக சின்னத்திரை நடிகர்கள், நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது மிகவும் அதிகரித்துவிட்டது. தற்போது மேலும் ஒரு இறப்பு சம்பவம் நடந்துள்ளது.
மும்பை அருகே மேற்கு வழி ரயில் தடத்தில் இன்று காந்திவிலி- போரிவிலி ரெயில் நிலையங்களுக்கு இடையே முதியவர் ஒருவர் அடிபட்டு உயிரிழந்து கிடந்துள்ளர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனே விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர் விசாரணையின் போது அவர் மின்சார ரயிலில் அடிபட்டு இறந்தாகவும் அவர் பிரபல பாலிவுட் சீரியல் நடிகர் முகேஷ் ராவல் என்பது தெரியவந்தது.
இவர் ஹிந்தி, குஜராத்தியில் டி.வி சீரியல்களில் நடித்துள்ளார். அவருக்கு வயது 66 என்றும் ஹிந்தி ராமாயணத்தில் விபீஷணாக நடித்ததன் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இறப்பு தற்கொலையா அல்லது கொலையா, என்ற கோனத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.