
'இருமுகன்' வெற்றிக்கு பின்னர் இயக்குனர் ஹரியுடன் இணைந்து சீயான் விக்ரம் 'சாமி 2' படத்தில் நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே.
ஆனால் தற்போது ஹரி 'எஸ் 3' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணியில் பிசியாக இருப்பதால் 'சாமி 2' படத்தின் படப்பிடிப்பு 2017ல்தான் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த இடைப்பட்ட காலத்தில் விக்ரம் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. தற்போது அந்த செய்தி உறுதியாகியுள்ளது. ஆம், சிம்புவின் 'வாலு' படத்தை இயக்கிய விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
SFF நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை உள்பட மற்ற நடிகர், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.
ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கெட்டப் மற்றும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி வரும் விக்ரம், இந்த படத்தில் என்ன கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.