
தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் சென்ராயன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். இவரின் வெகுளியான பேச்சு, நடவடிக்கைகள் வெகுவாக அனைவரையும் கவர்ந்தது. எனினும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி சில வாரங்களில் குறைவான ஓட்டுகள் பெற்றதால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
தற்போது நடிகர் சென்ராயனின் மனைவி கயல்விழி கர்பமாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது, நான்கு வருடங்களுக்கு பின்னர் தன் மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை கேட்டு பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே துள்ளிக் குதித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ரணகளம் செய்தார்.
இந்த காட்சி பார்ப்பவர்களையே மெய் சிலிர்க்க வைத்தது. தற்போது கர்ப்பமாக இருக்கும் அவரின் மனைவி கயல்விழி ஆசையை நிறைவேற்றியுள்ளார் சென்ராயன்.
சென்ராயனின் மனைவி கயல்விழி, நடிகை சினேகாவின் தீவிர ரசிகையாம். ஒரு முறையாவது அவரை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்பது அவரின் ஆசையாம். இதை ஒரு முறை சென்ராயனிடம் கூட தெரிவித்துள்ளார்.
இதனால் தற்போது கயல்விழிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சினேகா வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார் சென்ராயன். மேலும் நடிகை சினேகாவும் அவருடன் நெருங்கி பழகியது மற்றும் இன்றி அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.