திமிர்,பிடிவாதம், ஆணவம்... தயாரிப்பாளர் சங்கத்தையே தகர்த்தார் தனுஷ் 2...

Published : Dec 06, 2018, 01:33 PM IST
திமிர்,பிடிவாதம், ஆணவம்... தயாரிப்பாளர் சங்கத்தையே தகர்த்தார் தனுஷ் 2...

சுருக்கம்

‘மாரி படத்தின் பார்ட் 2’ போலவே, பழைய தனுஷ் காணாமல் போய் புதிய தனுஷ்2 வாக உருவாகியிருக்கிறார் ரஜினியின் மாப்பிள்ளை. இந்த தனுஷ்2’வின் அட்டகாசம் தாங்கமுடியாமல் ஜெயம் ரவி,விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என்று ஆளாளுக்கு அலறுகிறார்கள்.

‘மாரி படத்தின் பார்ட் 2’ போலவே, பழைய தனுஷ் காணாமல் போய் புதிய தனுஷ்2 வாக உருவாகியிருக்கிறார் ரஜினியின் மாப்பிள்ளை. இந்த தனுஷ்2’வின் அட்டகாசம் தாங்கமுடியாமல் ஜெயம் ரவி,விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என்று ஆளாளுக்கு அலறுகிறார்கள்.

‘என் படத்தை எப்ப ரிலீஸ் பண்ணனும்னு நானேதான் முடிவு பண்ணுவேன்’ என்று முரட்டுப்பிடிவாதம் பிடித்து தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தைக் கூட தனுஷ் துச்சமென மதித்த நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் பட ரெகுலேசன் நேற்றோடு மண்டையைப் போட்டது. 

தயாரிப்பாளர் சங்கப்பஞ்சாயத்தை யாருமே மதிக்காத நிலையில் யார் வேண்டுமானாலும் எந்த தேதியில் வேண்டுமானாலும் படத்தை ரிலீஸ் செய்துகொள்ளலாம் என்று துண்டை உதறித் தோளில் போட்டுக்கிளம்பிவிட்டார்கள் பஞ்சாயத்து பண்ணியவர்கள். இந்நிலையில் டிசம்பர் 21 அன்று ‘மாரி2’ வுடன் ரிலீஸாக உள்ள ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’ சிவகார்த்திகேயனின் ‘கனா’, விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ ஆகிய படங்கள் விழிபிதுங்கி நிற்கின்றன.

தமிழ் நாட்டில் இருக்கிற 1100 தியேட்டர்களில் தனுஷின் ‘மாரி2’ எப்படியும் 600 தியேட்டர்கள் வரை ரிலீஸாகும். மீதி இருக்கிற 500 தியேட்டர்களை ஜெயம் ரவி, விஜய் சேதுபதி,சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 150 தியேட்டர்களாகத்தான் பிரித்துக்கொள்ள முடியும். இதையெல்லாம் தட்டிக்கேட்கவேண்டிய தலைவர் விஷால் வழக்கம் போல் சுவரேறி தப்பி ஓடிவிட்டார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அஜித்தோடு மாப்பிள்ளை சார் சபரீசன்; சூடு வச்ச மாதிரி ஒரு கூட்டமே கதறுமே.? சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நக்கல்
வா வாத்தியார் படத்தின் புது ரிலீஸ் தேதி இதுதான்... இம்முறையாவது ரிலீஸ் ஆகுமா...?