
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் மூன்றாவது தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் ஆர்.ஜே.வைஷ்ணவி. எனவே யார் எந்த தப்பு செய்தாலும் அதனை போட்டியாளர்கள் இவரிடம் தான் வந்து முறையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில், மும்தாஜ், வைஷ்ணவியிடம் வந்து, டானி தங்களை வேலைக்காரர்கள் போல், இதை பண்ணுங்க அதை பண்ணுங்க என மிரட்டும் தோனியில் கேட்பது சரி இல்லை என கூறுகிறார்.
இதற்கு வைஷ்ணவி, இது தான் அவரின் உண்மையான குணம் என தெரிந்தால், அதனை அப்படியோ விட்டு விட வேண்டும் என மும்தாஜுக்கு பதில் கூறுகிறார். இதற்கு மும்தாஜ் அது தனக்கு சரியாக வராது என தெரிவிக்கிறார்.
பின் டானி பேசும் காட்சிகள் காட்டப்படுகிறது. அப்போது யாரையோ காட்டி டானி சீன் போட்டதாக சென்ராயனிடம் கூறுகிறார். இதற்கு சென்ராயன், அவரை சமாதானம் செய்து உனக்கு எந்த வேலையும் தெரியாது, எனக்கும் எந்த வேலையும் தெரியாது இதை நம்பி தான் வந்திருக்கிறோம் என கூறுகிறார்.
ரசிகர்கள் மத்தியில் சென்ராயனுக்கு நல்ல வரவேற்ப்பு இருக்கும் நிலையில் இவர் இப்படி பேசியுள்ளது சிறு சந்தேகத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. ரசிகர்கள் சிலர் இந்த நிகழ்ச்சிக்காக சென்ராயன் நடித்து கொண்டிருக்கிறாரா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். உண்மையில் ஏன்? இப்படி பேசினார் சென்ராயன் என இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.