Anjali has omicron : அச்சசோ.. செல்வராகவனை தொடர்ந்து அஞ்சலிக்கு ஓமிக்ரான்.. அப்போ மூன்று பிள்ளைகள்..

Kanmani P   | Asianet News
Published : Jan 23, 2022, 05:44 PM IST
Anjali has omicron : அச்சசோ.. செல்வராகவனை தொடர்ந்து அஞ்சலிக்கு ஓமிக்ரான்.. அப்போ மூன்று பிள்ளைகள்..

சுருக்கம்

Anjali has omicron : கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள செல்வராகவனை தொடர்ந்து அவரது மனைவி அஞ்சலிக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது..

இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகரித்துவருகின்றன. 3ம் அலைக்கான அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஜனவரி 31ம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் வேகத்தில் மின்னல் வேகத்தில் இருந்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த 6ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 சினிமா பிரபலங்கள் பலருக்கும் கொரோனா உறுதியாகிவருகிறது. தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, இசையமைப்பாளர் தமன், பாடகர் சோனு நிகாம் மற்றும் நடிகை த்ரிஷா நடிகர் சத்யராஜ், இயக்குனர் பிரியதர்ஷன், அருண்விஜய், குஷ்பூ, சுரேஷ் கோபி, ஜெயராம், துல்கர்சல்மான்  என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இவர்களில் பலரும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். அதோடு பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் ஆபத்தான நிலையில் icu -வில் சிகிச்சை பெற்று வருகிறார்..

இந்நிலையில் பிரபல இயக்குனரும், தனுஷின் அண்ணனுமான செல்வராகவன் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளார்.. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள குறிப்பில்..எனக்கு இன்று (ஜன 23) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 அல்லது 3 நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்தோர் தயவுசெய்து நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்கள் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளவும். தயவுசெய்து கவனமுடன் இருங்கள். அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு செல்வராகவன் கூறியுள்ளார்.  

முன்னதாக இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி, தனக்கு ஓமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக கடந்த 2 தினங்களுக்கு முன்பு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருத்துள்ளார்.  செல்வராகவனுக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உ றுதியான நிலையில், அவர்களது 3 குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வார்கள் என்று ரசிகர்கள் வருத்தப்பட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!