Arnold in the accident : தாறுமாறாக காரை ஓட்டி விபத்தில் சிக்கிய ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர்!

Kanmani P   | Asianet News
Published : Jan 23, 2022, 05:09 PM IST
Arnold in the accident : தாறுமாறாக காரை  ஓட்டி விபத்தில் சிக்கிய ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர்!

சுருக்கம்

Arnold in the accident : முன்னால் சென்று கொண்டிருந்த காரின் மீது அர்னால்டின் கார் மோதி உள்ளது.  இதில் முன்னால் சென்று கொண்டிருந்த காரில் இருந்தவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, அர்னால்ட் சிறிது காயத்துடன் தப்பியுள்ளார்..

பிரபல ஹாலிவூட்  நடிகரும் கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் கவர்னருமான அர்னால்ட்  ஸ்வார்ஸ்னேக்கர் 'டெர்மினேட்டர்' படத்தின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனவர். பாடி பில்டிங்கில் உலக சாதனை படைத்த இவருக்கு தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. ஷங்கர் - விக்ரம்  கூட்டணியில் உருவான ஐ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கு சென்னை வந்திருந்தார் அர்னால்ட். 

கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் கவர்னராக இருந்த அர்னால்ட் நடிப்பில் கடைசியாக 2019ஆம் ஆண்டு டெர்மினேட்டர் டார்க்பேட் என்ற திரைப்படம் வெளியானது. மேலும் குங் ப்யூரி 2 என்ற திரைப்படம் இந்த ஆண்டு வெளிவர உள்ளது.

இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் கார் விபத்தில் சிக்கிய ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் காயமின்றி உயிர் தப்பினார். கடந்த வெள்ளிக்கிழமை 74 வயதான அர்னால்ட் ஓட்டி வந்த கார் ரிவேரியா கன்ட்ரி கிளப் அருகே சன்செட் பவுல்வர்ட் மற்றும் அலென்ஃபோர்ட் அவென்யூ சந்திப்பில் மற்றொரு வாகனத்துடன் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த மோதலின் விளைவாக சந்திப்பில் இருந்த மற்ற இரண்டு கார்களும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளது.

இது குறித்த லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறை அறிக்கையின்படி, தலையில் சிராய்ப்பு ஏற்பட்ட ஒரு பெண்ணை அந்த விபத்திலிருந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் விபத்துக்கு காரணமான நடிகர் அர்னால்டு எந்தவித காயமடையவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

அதோடு போதைப்பொருள் அல்லது மதுபானம் காரணமாக விபத்துக்குள்ளானதாக  அறிகுறிகள் எதுவும் இல்லை, ஆனால் விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!