திருமணமான இளம் நடிகரின் வீட்டுக்கு திடீர் விசிட்... ஊரடங்கிலும் முதல்வர் கொடுத்த சர்ப்ரைஸ்

Ganesh A   | Asianet News
Published : Jan 23, 2022, 03:18 PM IST
திருமணமான இளம் நடிகரின் வீட்டுக்கு திடீர் விசிட்... ஊரடங்கிலும் முதல்வர் கொடுத்த சர்ப்ரைஸ்

சுருக்கம்

முழு ஊரடங்கு நாளிலும் தன்னை நேரில் வந்து வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் வெற்றி, தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இளம் நடிகர்களில் ஒருவர் வெற்றி. 8 தோட்டாக்கள், ஜீவி, கேர் ஆஃப் காதல், வனம் என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருகிறார். இதுதவிர மெமரீஸ், தீங்கிரை, ஜோதி, பம்பர் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பம்பர் படத்தில் வெற்றிக்கு ஜோடியாக பிக்பாஸ் பிரபலம் ஷிவானி நடிக்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் வெற்றிக்கு பிரியா என்பவருடன் திருமணம் நடந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இவர்களது திருமணத்தில் கலந்துகொண்டனர். இதையடுத்து இவரது திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் நடிகர் வெற்றி - பிரியா தம்பதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று திருமண வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். செடிகள் நிறைந்த பசுமை கூடையையும் பரிசாக வழங்கினார். முழு ஊரடங்கு நாளிலும் தன்னை நேரில் வந்து வாழ்த்திய முதல்வருக்கு நடிகர் வெற்றி நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வின் போது முதல்வருடன் அமைச்சர் துரைமுருகன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!