அது அவசரத்தில் எடுத்த முடிவு... ஒரே ஹோட்டலில் தனுஷ்- ஐஸ்வர்யா... சளைக்காத ரஜினி..!

Published : Jan 23, 2022, 02:44 PM IST
அது அவசரத்தில் எடுத்த முடிவு... ஒரே ஹோட்டலில் தனுஷ்- ஐஸ்வர்யா... சளைக்காத ரஜினி..!

சுருக்கம்

இருவரும் சமரசமாகி விரைவில் ஒன்றாக வாழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தனுஷ்- ஐஸ்வர்யா விவகாரம் என்னவாகுகோ, ஏதாகுமோ என சில நாட்களாக ஆழ்ந்த கவலையில் இருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். தனுஷும், ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும் காதலித்து கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். 18 வருடங்கள் தாம்பத்யம் நடத்திய அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள். ஓரளவுக்கு வளர்ந்தும் விட்டார்கள்.

யார் கண் பட்டதோ திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து தாங்கள் பிரிவதாக ஜனவரி 17ம் தேதி தனுஷும், ஐஸ்வர்யாவும் சமூக வலைதளங்களில் அறிவித்து அதிர வைத்தார்கள். இது அவசரப்பட்ட முடிவு என பலரும் கருத்து தெரிவித்தார்கள். திரையுலகை சேர்ந்த பலரும் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தார்கள். 

பிரிவு அறிவிப்பை வெளியிட்ட பிறகும் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தன் பெயருக்கு பின்னால் இருக்கும் தனுஷின் பெயரை ஐஸ்வர்யா இதுவரை நீக்கவில்லை. வழக்கமாக யாராவது விவாகரத்து குறித்து அறிவித்தால் உடனே சமூக வலைதள பக்கங்களில் இருந்து கணவர் பெயரை நீக்கிவிடுவார்கள். இதுவே இருவரும் சமாதானமாகி வருவதற்கு அறிகுறியாக தெரிகிறது. 

ஐஸ்வர்யாவும், தனுஷும் முறைப்படி விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு செல்ல மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. தனுஷையும், ஐஸ்வர்யாவையும் மீண்டும் சேர்த்து வைக்கவே இருவரது குடும்பத்தாரும், நண்பர்களும் முயற்சி செய்து வருகிறார்கள். தனுஷும் முறைப்படி விவாகரத்து கேட்டு நீதிமன்றம் செல்ல மாட்டார்கள் என பேச்சு கிளம்பியிருக்கிறது.

இந்த நிலைமையில்தான், தனுஷும், ஐஸ்வர்யாவும் ஹைதராபாத்தில் ஒரே ஹோட்டலில் தங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தனுஷ் ஹைதராபாத்தில் தங்கி வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்து வருகிறார்.

 ஐஸ்வர்யாவும் தனது படவேலைகளுக்காக ஹைதராபாத்தில் ராமோஜி ராவ் ஸ்டுடியோஸில் இருக்கும் சித்தாரா ஹோட்டலில் அவர்கள் தங்கியிருக்கிறார்கள். ராமோஜி ராவ் ஸ்டுடியோஸில் ஷூட்டிங்கிற்கு வரும் பிரபலங்கள் சித்தாரா ஹோட்டலில் தான் பெரும்பாலும் தங்குவார்கள்.

ஐஸ்வர்யாவும், தனுஷும் ஹைதராபாத்தில் சந்தித்து பேசினார்களா என்பது தெரியவில்லை. ஆனால் தாங்கள் ஒரே ஹோட்டலில் தங்கியிருப்பது மட்டும் தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் நன்கு தெரியுமாம். இதனால் இருவரும் சமரசமாகி விரைவில் ஒன்றாக வாழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025-ல் ஹாட்ரிக் ஹிட்! ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி சொன்ன தனுஷ் - 2026-ல் காத்திருக்கும் மெகா பிளான்கள்!
ரசிகர்களுக்கு செம ட்ரீட்! 'ஸ்பிரிட்' படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக்!