நாங்கள் குரல் கொடுப்போம்.. நடிகை கடத்தல் வழக்கிற்கு ஆதரவளிக்கும் மலையாள சூப்பர் ஸ்டார்..

Kanmani P   | Asianet News
Published : Jan 23, 2022, 02:04 PM IST
நாங்கள் குரல் கொடுப்போம்.. நடிகை  கடத்தல் வழக்கிற்கு ஆதரவளிக்கும் மலையாள சூப்பர் ஸ்டார்..

சுருக்கம்

பாதிக்கப்பட்ட நடிகையின் பதிவை ஷேர் செய்த நடிகர் மம்மூட்டி நான் உன்னோடு இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். அதே போல மோகன் லால் , respect என குறிப்பிட்டுள்ளார். 

தென் இந்திய மொழிகளில் பிரபலமாக இருந்த நடிகை கடந்த  2017 ஆம் ஆண்டு  கேரளாவில் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது . இதில் முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். மலையாள நடிகர் திலீப்புக்கும் இந்த கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் அவரும் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

நடிகை கடத்தல் சம்பவத்தில் நடிகர் திலீப் நேரடி தொடர்பில் இல்லை என்றாலும், பாலியல் தொல்லை காட்சியை செல்போனில் வீடியோ பதிவு செய்ததாக கைது செய்யப்பட்ட பல்சர் சுனிலுக்கும், நடிகர் திலீப்புக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்கிடையே நடிகர் திலீப்பின் நண்பரும், பிரபல மலையாள இயக்குனருமான பால சந்திரகுமார் ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் நடிகர் திலீப்பிற்கு எதிராக தெரிவித்த கருத்துகள் இந்த வழக்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இந்த கருத்துகளின் அடிப்படையில் நடிகர் திலீப்பை மீண்டும் விசாரிக்க கேரள போலீசாருக்கு கொச்சி கோர்ட்டு அனுமதி அளித்தது. மேலும் இம்மாதம் 20-ம் தேதிக்கு முன்னதாக விசாரணையை தொடங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

.இது குறித்து சமீபத்தில் மனம் திறந்த பாதிக்கப்பட்ட நடிகை .."இது எளிதான பயணம் அல்ல, விக்டிமாக இருந்து சர்வைவராக மாறுவதற்கான பயணம். 5 ஆண்டுகளாக, என் பெயரும் எனது அடையாளமும் என் மீது இழைக்கப்பட்ட தாக்குதலின் பாரத்தில் அடக்கப்பட்டுள்ளது. குற்றம் செய்தது நான் இல்லை என்றாலும். குற்றம் செய்தேன் என அடையாளப்படுத்தப்படுகிறேன். என்னை அவமானப்படுத்தவும், மௌனப்படுத்தவும், தனிமைப்படுத்தவும் பல முயற்சிகள் நடந்துள்ளன.ஆனால் அப்படிப்பட்ட சமயங்களில் என் குரலை உயிர்ப்பிக்க சிலர் முன்வந்திருக்கிறார்கள்.இப்போது பல குரல்கள் எனக்காக பேசுவதைக் கேட்கும்போது நீதிக்கான இந்த போராட்டத்தில் நான் மட்டும் இல்லை என்பது புரிகிறது. நீதி நிலைபெறவும், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவும், வேறு யாரும் இதுபோன்ற நிலைக்கு ஆளாகாமல் இருக்கவும், இந்தப் பயணத்தைத் தொடர்கிறேன். என்னுடன் நிற்கும் அனைவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் உங்கள் அன்புக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.

நடிகையின் பதிவை ஷேர் செய்த நடிகர் மம்மூட்டி நான் உன்னோடு இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். அதே போல மோகன் லால் , respect என குறிப்பிட்டுள்ளார்.  பதிவை ஷேர் செய்த நடிகர் மம்மூட்டி நான் உன்னோடு இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். அதே போல மோகன் லால் , respect என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவிற்கு கமெண்ட் செய்துள்ள திரை பிரபலங்களான நிவின் பாலி, ஆசிப் அலி, அஜு வர்கீஸ், மஞ்சு வாரியர், ஆஷிக் அபு, பாபுராஜ், அன்னா பென், ஆர்யா, ஸ்ம்ருதி கிரண், சுப்ரியா மேனன், ஃபெமினா ஜார்ஜ், பார்வதி, டோவினோ தாமஸ், துல்கர் சல்மான் போன்ற பல நட்சத்திரங்கள் ஆதரவளித்துள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இன்னும் 100 நாளில் சம்பவம் இருக்கு... கவுண்ட் டவுன் உடன் வெளிவந்த டாக்ஸிக் அப்டேட்
பாக்ஸ் ஆபிஸ் ‘பாட்ஷா’ ரஜினிகாந்த் நடித்து அதிக வசூல் அள்ளிய டாப் 7 மூவீஸ் ஒரு பார்வை