ராயன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் செல்வராகவன் மேடையில் தனது தம்பி தனுஷ் பற்றி வெளிப்படையாகப் பேசி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார்.
ராயன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் செல்வராகவன் மேடையில் தனது தம்பி தனுஷ் பற்றி வெளிப்படையாகப் பேசி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் போராடி முன்னுக்கு வந்தவர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். நடிப்புடன் நிறுத்திக்கொள்ளாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் எனத் தனது திறமையக் நிரூப்பித்து இருக்கிறார். பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தனுஷ் இப்போது, ராயன் படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் ராயன் படத்தை மெகா பட்ஜெட்டில் தயாரித்திருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், காளிதாஸ் ஜெயராம் ஆகியோரும் நடித்துள்ளனர்.
மீண்டும் மணப்பெண்ணாக மாறிய ஶ்ரீதிகா! செக்கச் சிவந்த சேலையில் ஆர்யனுடன் ப்ரீ வெட்டிங் போட்டோஸ்!
மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள தனுஷ் இப்படத்தில் வடசென்னையை மையமாக வைத்து மாறுபட்ட திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார். இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பும் பெற்றது. சந்தோஷ் நாராயணன் பாடிய கானா பாட்டு ரசிகர்களை அதிகம் கவர்ந்திருக்கிறது.
இந்நிலையில் ராயன் படத்தின் இசை வெளியீடு அண்மையில் பிரமாண்டமாக நடந்துள்ளது. இந்த விழாவில் ராயன் படத்தில் நடித்துள்ள தனுஷின் அண்ணனும் இயக்குநருமான செல்வராகவன் கலந்துகொண்டார். மேடையில் பேசிய செல்வராகவன் தனது தம்பி தனுஷ் பற்றி வெளிப்படையாகப் பேசி இருக்கிறார்.
"எல்லாரும் சின்ன வயசுல தம்பிய பாசமா பாத்துக்கோங்க. அடிக்காதிங்க. ஒதைக்காதிங்க. சந்தோஷமா வெச்சுக்கோங்க. இதுக்கு ரீசன் என்னன்னா அவங்க வச்சு செய்வாங்க." என்று செல்வராகவன் கூறினார். இதைக் கேட்ட உடனே மேடையில் இருந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் சிரித்துக்கொண்டே "புரிஞ்சுது" என்று கூறினார். செல்வராகவனின் இந்த ஓபன் டாக் மேடைக்கு முன்னால் அமர்ந்திருந்த நடிகர் தனுஷ் உள்பட அனைவரையும் கலகலவென்று சிரிக்க வைத்தது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்வராகவனின் பேச்சு வீடியோவாகப் பகிரப்பட்டுள்ளது. வைரலாகப் பரவிவரும் இந்த வீடியோவில் பலரும் "இவரு எந்தத் தம்பியைப் பற்றிச் சொல்றாரு?" என்று கேள்வி எழுப்புகின்றனர். "தம்பியை அடிக்காம எப்படி அண்ணா?" என்றும் சிலர் கேட்டுள்ளனர்.
Google Backup: கூகுள் அக்கவுண்ட் டேட்டாவை முழுமையாக பேக்அப் எடுப்பது எப்படி?