பர்ஸை விமானத்தில் தவற விட்ட செல்வராகவன்... 15 நிமிடத்தில் நடந்த சம்பவம்! வைரலாகும் ட்விட்..!

By manimegalai a  |  First Published Aug 2, 2023, 8:05 PM IST

இயக்குனர் செல்வராகவன் மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த போது, விமானத்தில் தன்னுடைய பர்ஸை தொலைத்து விட்டதாகவும், பின்னர் ஏர் இந்தியா நிறுவனம் அதனை பத்திரமாக திருப்பி கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
 


தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் உருவான 'காதல் கொண்டேன்' படத்தின் மூலம் இயக்குனராக தன்னுடைய பயணத்தை துவங்கிய இவர், இந்த படத்தை தொடர்ந்து இயக்கிய, '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவருடைய படங்களுக்கென தனி ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.

இயக்குனர் என்பதை தாண்டி, தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்தார் செல்வராகவன். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான, 'சாணி காகிதம்', மோகன் ஜி இயக்கிய 'பகாசூரன்' போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தனுஷின் டி50 படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்து.

Tap to resize

Latest Videos

பூனை போல் இருந்து புலியாக மாறும் தலைவர்! 'ஜெயிலர்' ட்ரைலரில் இதை கவனிச்சீங்களா?

 ஒரு பக்கம் நடிப்பில் பிசியாக இருந்தாலும், அடுத்தடுத்து தன்னுடைய இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஆயிரத்தில் ஒருவன் 2 மற்றும் புதுப்பேட்டை 2 போன்ற படங்களை இயக்கவும் தயாராகி உள்ளார். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் செல்வராகவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ள பதிவு, வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

ரீலில் வில்லன்... நிஜத்தில் சொக்க தங்கம்! 'குக் வித் கோமாளி' பரிசு தொகையை மைம் கோபி என்ன செய்தார் தெரியுமா?

அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது... 'இன்று மதுரையில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தில், என்னுடைய பஸ்ஸை தவறவிட்டு விட்டேன்'. அது தொலைந்த 15 நிமிடங்களில் ஏர் இந்தியா நிறுவனத்தின் மூலம் என்னை தொடர்பு கொண்டார்கள். அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் என்னுடைய அனைத்து விபரங்களையும் அனுப்பிய நிலையில், பத்திரமாக என்னுடைய பர்ஸ் திரும்ப பெறப்பட்டது. அவர்களின் சேவையால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன் நன்றி  ஏர் இந்தியாஎன தெரிவித்துள்ளார்.

I missed my wallet in flight from madurai today. With in fifteen minutes they called and informed me. They have sent a mail about the contents and I collected the wallet. I'm really really impressed. A big thanks to !

— selvaraghavan (@selvaraghavan)

 

click me!