
தமிழ் திரையுலகில் தனித்துவமான இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். தற்போது இவர் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் படம் தோல்வியடைந்தாலும், அப்படத்தில் இவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தன.
தற்போது செல்வராகவன் நடிப்பில் தயாராகி உள்ள படம் சாணிக் காயிதம். அவர் கதையின் நாயகனாக நடிக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். இவர் கடந்தாண்டு வெளியான ராக்கி படத்தை இயக்கி இருந்தார்.
சாணிக்காயிதம் படத்தில் செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்துக்கு யாமினி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வருகிற மே 6-ந் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் 2 வாரமே எஞ்சி உள்ள நிலையில், இப்படத்தின் புரமோஷன் பணிகளும் வேகமெடுத்துள்ளன. அந்த வகையில் சாணிக்காயிதம் படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.
அசுரன் தனுஷுக்கே டஃப் கொடுக்கும் வகையில் செல்வராகவனின் நடிப்பு அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். அதேபோல் பொன்னி என்கிற கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷுக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்துள்ளது.
இதையும் படியுங்கள்... Actor Suriya : காவல்துறைக்கு உதவிக்கரம் நீட்டிய சூர்யா... ரியல் ஹீரோ என பாராட்டும் ரசிகர்கள்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.