இப்படி ஒரு சீன்ல நடிச்சுட்டு அதை பெருமையா சொல்ல இவரால மட்டும்தாங்க முடியும் !!

Published : Dec 18, 2018, 10:07 PM IST
இப்படி ஒரு சீன்ல நடிச்சுட்டு அதை பெருமையா சொல்ல இவரால மட்டும்தாங்க முடியும் !!

சுருக்கம்

நான் நடித்த முதல் காட்சியே என் வாயில் ஒருவர் சிறுநீர் கழிப்பது போன்றது தான் என்றும், அதைப்பார்த்து அனைவரும் கைதட்டியபோது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது என்றும் நடிகர் விஜய் சேதுபதி மனம் திறந்து கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீதக்காதி திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ளது. பாலாஜி தரணிதரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் விஜய் சேதுபதி.நடித்துள்ள இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த விஜய் சேதுபதியிடம், நீங்கள் திரைப்படத்துறைக்குள் நுழையக் காரணம் என்ன என்று கேட்கப்பட்டது.  

அதற்கு பதில் அளித்த விஜய் சேதுபதி வர்ணம்’ என்றொரு படத்தில்  முதல்முறையாக எனக்கொரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சமுதாயத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவனாக நான் நடித்தேன். அதில் முதல் காட்சியே என் வாயில் ஒருவர் சிறுநீர் கழிப்பது போன்றது.

நான் அதில் நடித்து முடித்ததும், ஒட்டுமொத்தப் படக்குழுவும் கைதட்டினர். அது எனக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. ஏனென்றால், என்னால் நடிக்க முடியும் என்று நான் அப்போது தான் உணர்ந்தேன் என கூறினார். அன்று கிடைத்த கைதட்டல்கள்தான் நான் தொடர்ந்து சினிமா துறைக்குள் இறங்க காரணமாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

நான் நடிப்பதால்தான் அந்தக் குழுவில் இயக்குநரில் ஆரம்பித்து லைட்மேன் வரை வேலைசெய்ய முடிகிறது என்பதை எனக்கு நானே பலமுறை சொல்லிக்கொண்டேன்” எனப் பதில் அளித்தார் விஜய் சேதுபதி.

இப்படி ஒரு சீனில் நடித்துவிட்டு அதை பெருமையாக விஜய் சேதபதி ஒருவரால் தான் முடியும் என்று அவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

‘சீதக்காதி’யைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்துள்ள ‘பேட்ட’ படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி