கல்வி விழிப்புணர்வு தூதராக அவதாரம் எடுத்த ரகுல் பிரீத் சிங்! வாழ்த்தும் ரசிகர்கள்!

By manimegalai aFirst Published Dec 18, 2018, 8:08 PM IST
Highlights

பொதுவாக நடிகைகள் என்றால், சோப்பு, ஷாம்பு, மற்றும் அழகு சாதனா பொருட்களின் நிறுவனங்களுக்கு தூதராக இருப்பார்கள். இதன் மூலம் இவர்களுக்கு வருடத்திற்கோ அல்லது 6 மாதத்திற்கு ஒரு முறையோ குறிப்பிட்ட தொகை கிடைக்கும். 

பொதுவாக நடிகைகள் என்றால், சோப்பு, ஷாம்பு, மற்றும் அழகு சாதனா பொருட்களின் நிறுவனங்களுக்கு தூதராக இருப்பார்கள். இதன் மூலம் இவர்களுக்கு வருடத்திற்கோ அல்லது 6 மாதத்திற்கு ஒரு முறையோ குறிப்பிட்ட தொகை கிடைக்கும். 

ஆனால் நடிகை ரகுல் பிரீத் சிங் தெலுங்கானா மாநிலத்தின் கல்வி விழிப்புணர்வு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் இவருடைய ரசிகர்கள் இவருக்கு தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

'தடையற தாக்க' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இந்த படத்தைத் தொடர்ந்து இவர் நடித்த 'புத்தகம்' , 'என்னமோ ஏதோ' ஆகிய படங்கள் தோல்வியை தழுவியதால் இவரை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கண்டுகொள்ளவே இல்லை.

இதைத்தொடர்ந்து தெலுங்கிற்கு சென்ற இவர், அங்கு நடித்த திரைப்படங்கள் வரிசையாக ஹிப் கொடுக்கவே தமிழ் இயக்குனர்களின் பார்வையும் இவர் மேற்பட்டது.  இதைத்தொடர்ந்து நடிகர் கார்த்தி நடித்து வெளியான  'தீரன் அதிகாரம் ஒன்று'  படத்தின் மூலம் தமிழில் ரீஎன்ட்ரி கொடுத்தார் ரகுல் பிரீத் சிங்.

இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதனால் இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது சூர்யாவுடன் 'என் ஜி கே', கார்த்தியுடன் 'தேவ்', உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் இவர் தெலுங்கானா மாநிலத்தின் "பேட்டி பச்சாவோ பேட்டி பதாவா'  என்ற திட்டத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் கூறும்போது இந்த அமைப்பின் முக்கிய நோக்கமே பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது தான் என்றும்  ஒரு பெண்ணுக்கு கல்வி கொடுத்தால் அது  அந்த குடும்பத்திற்கு கல்வி கொடுப்பதற்கு சமம். எனவே இந்த அமைப்பின் மூலம் தெலுங்கானா மாநிலத்தின் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று, மக்களை சந்தித்து பெண்கல்வி குறித்தும் படிப்பின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த போவதாக கூறியுள்ளார்

click me!