மனிஷாவின் 28 டேக்.. கெஞ்சி வாட்ஸ் ஆப் நோட்.! பிஸ்மி மனைவி செய்த விஷயம்! சீனு ராமசாமி போட்ட பரபரப்பு பதிவு!

Published : Nov 25, 2023, 03:31 PM IST
மனிஷாவின் 28 டேக்.. கெஞ்சி வாட்ஸ் ஆப் நோட்.! பிஸ்மி மனைவி செய்த விஷயம்! சீனு ராமசாமி போட்ட பரபரப்பு பதிவு!

சுருக்கம்

பத்திரிகையாளர் பிஸ்மி, தேசிய விருது இயக்குனர் சீனு ராமசாமி குறித்து, வலைப்பேச்சு தளத்தில் கூறிய விஷயம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதற்க்கு பதில் கொடுத்துள்ளார் சீனு ராமசாமி.  

'கூடல் நகர்' திரைப்படத்தின் மூலம் கடந்த 2007-ஆம் ஆண்டு, தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. இதை தொடர்ந்து இவர் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய 'தென்மேற்கு பருவக்காற்று' திரைப்படம், தேசிய விருதை பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்கிய, தர்மதுரை, நீர்ப்பறவை, கண்ணே கலைமானே, மாமனிதன் போன்ற படங்கள் அனைத்துமே உணர்வு பூர்வமான கதைக்களத்தில் உருவான படங்களே.

இவர் இயக்கத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி இருக்க வேண்டிய திரைப்படம் 'இடம் பொருள் ஏவல்' ஆனால் தற்போது வரை ஒரு சில காரணங்களால் வெளியாகாமல் உள்ளது. இந்த படத்தில் விஜய் சேர்த்துபதி மற்றும் விஷ்ணு விஷால் ஆகிய இருவர் கதாநாயகர்களாக நடித்திருந்தனர். விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த நிலையில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நந்திதா நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க கமிட் ஆனவர் மனிஷா யாதவ். 

80s Buildup Day 1 Collection: சந்தானத்தின் 80ஸ் பில்டப் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இப்படத்தில் இருந்து மனிஷா வெளியேற காரணம், சீனு ராமசாமி செய்த டார்ச்சர் என கடந்த சில தினங்களுக்கு முன்பு பிஸ்மி வலைப்பேச்சு தளத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகை மனிஷா யாதவ்... "ஒரு குப்பை கதை பட ஆடியோ லாஞ்சில் சீனு ராமசாமி மேடையில் அமர்ந்திருந்ததால் தான் எல்லாருக்கும் சொன்னது போல் அவருக்கும் நன்றி சொன்னேன். எதையும் மாற்ற முடியாது. 9 வருஷத்துக்கு முன்னாடி என்ன சொன்னேனோ அதில் உறுதியாக இருக்கிறேன். என்னிடம் தரக்குறைவாக நடந்துகொண்டவரிடம் நான் ஏன் மீண்டும் பணியாற்ற போகிறேன்” என பதிவிட்டிருந்தார்.

பற்றி எரிந்து கொண்டிருக்கும் இந்த விவகாரம் குறித்து...  சீனு ராமசாமி மீண்டும் தன்னிலை விளக்கம் கொடுத்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் கூறி இருபதாவது,  சில கேள்விகள் flash back 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

1) இடம் பொருள் ஏவல் படப்பிடிப்பிற்கு வந்த முதல் நாள், ஏன் முதல் ஷாட்டில் 28 டேக் வாங்கினார் மணிஷா.

2) படப்பிடிப்பு தளத்தில் உதவிட வந்த மூத்த நடிகையர் வடிவுக்கரசி அவர்களிடம் கோபித்து கடுஞ்சொல் வீசினாரே ஏன்?

3) விஷ்ணு விஷால் ஜோடியாக நடியுங்கள் என நானும் அண்ணாமலை பீலிம்ஸ் கணேஷ் அவர்களும் கேட்ட பொழுது ஏன் மறுத்தார் ?

4) என் சம்பளத்தில் ஒரு லட்சம் நஷ்ட ஈடாக பெற்றாரே ஏன்..?

5) மூன்று நாட்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தந்த ஹோட்டலில் தன் தயாருடன் தங்கிருந்த மனிஷா அவர்களை கடைசி  ஒரு நாள் காலையில் படப்பிடிப்பில்  சந்தித்தேன்.

6) அந்த 28 டேக் மேக்கிங் வீடியோவுக்கு காத்திருக்கிறேன். தெய்வம் அருளனும் இருப்பினும் உங்களோடு திரும்ப பணி புரிய விரும்பினேன். என தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து நவீன இலஷ்மி காந்தன் பிஸ்மி அவர்களுக்கு

அண்ணன் பிஸ்மி ஒவ்வொரு நாள் தன் பேச்சை எனக்கு அனுப்புவார். ஒரு பூ வாட்ஸ்சப்பில் அவருக்கு போடுவேன் கடைசியில் மலர் அஞ்சலி எனக்கு வைக்க முயல்வார் என நான் எதிர் பார்க்கவில்லை.

மாமனிதன் பெற்ற விருதுகளை பிண அலங்காரம் என வசை பாடியது எனக்கு வலித்தது,

மாமனிதன்  உலகம் போற்றிய ஒரு சினிமா, அதனால் உங்களை ஒருமையில் எழுதி விட்டேன். 

ஏன் கடந்த ஒன்னரை வருடமாக என்னை டார்க்கெட் செய்து வலை பேச்சில் 20 வீடியோ பேசினீர்கள் பிஸ்மி அண்ணா?

கடவுளை கண்டேன் ! சேரிப் புயல் திருமா.. அன்பானி - அதானியை விட்டு வைக்காத மன்சூர் அலிகானின் தடாலடி அறிக்கை!

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மூலமாக பேசி பின் நானே அண்ணே என்னை நெகட்டிவா சொல்ல வேண்டாம் என கெஞ்சிய வாய்ஸ் நோட்ஸ் அனுப்பினேன் மூன்று மாதம் முன்பு.

ஆண்களை படத்தில் நீக்கினால் சிறந்த டைரக்டர் அதுவே பெண்களை நீக்கினால் பாலியல் பழியா?

உங்கள் மனைவியார் என் வீட்டுக்கு புகைப்பட கலைஞரோடு வந்து என் அம்மாவை பேட்டி எடுத்தாங்க என்னையும் என் அம்மாவையும் இணைத்து படமும் எடுத்தாங்க அந்த பேட்டியை நன்றியோடு என்றும் நினைப்பேன். அன்பன் சீனு ராமசாமி என தெரிவித்துள்ளார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஓஜி இயக்குநருக்கு பிரம்மாண்டமான கார் பரிசளித்த பவன் கல்யாண்: காரின் விலை இத்தனை கோடியா? அடேங்கப்பா!
படத்துக்காக அல்ல, பணத்துக்கும், புகழுக்கும் வேலை செய்கிறார்கள்; அனிருத் பற்றி தமன் ஆதங்கம்!