ராகவா லாரன்ஸின் குற்றச்சாட்டுகளுக்கு சுடச்சுட பதிலளித்த சீமான்....

By Muthurama LingamFirst Published Apr 15, 2019, 1:59 PM IST
Highlights

சீமானின் பெயரைச் சொல்லாமல், ஆனால் தெளிவாக அனைவரும் புரிந்துகொள்ளும்படி, நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் வெளியிட்ட  ஆதங்கங்களுக்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவித்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைவர்.

சீமானின் பெயரைச் சொல்லாமல், ஆனால் தெளிவாக அனைவரும் புரிந்துகொள்ளும்படி, நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் வெளியிட்ட  ஆதங்கங்களுக்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவித்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைவர்.

இன்று காலை வெளியிட்டிருந்த நீண்ட அறிக்கை ஒன்றில் நாம் தமிழர் கட்சியினர் மீது குற்றப்பத்திரிகை வாசித்திருந்த ராகவா லாரன்ஸ் இறுதியில் ...இந்த எனது அறிக்கையின் மூலமாக உங்களுக்கு எந்த வித பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில் தான் 
உங்களது பெயரை இங்கு குறிப்பிடவில்லை! தயவுசெய்து என்னையும் எனது மாற்று திறனாளி பிள்ளைகளின் மன உணர்வுகளையும்,  புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்....

 *"நான் சொல்வது சரி"* என உங்களுக்கு தோன்றினால் *"தம்பி வாப்பா பேசுவோம்!"* என கூப்பிடுங்கள்.... *"நானே உங்களது வீட்டுக்கு வருகிறேன்....."*  உட்கார்ந்து.....மனம் விட்டு பேசுவோம்! *"சுமூகமாகி"* "அவரவர் வேலையை, அவரவர் செய்வோம்!" *"நீங்களும் வாழுங்கள்!**"வாழவும் விடுங்கள்!"*
 இல்லை...... *"இதை பிரச்சனையாகத்தான் நானும் எனது தொண்டர்களும் அணுகுவோம்"* என நீங்கள் முடிவெடுத்தால்.... 
 அதற்கும் நான் தயார்!

 *"சமாதானமா?* *"சவாலா?"* முடிவை நீங்களே எடுங்கள்! *"சாய்ஸ் யுவர்ஸ்...!"*  அன்புடன்... உங்கள் அன்புத்தம்பி *"ராகவா லாரன்ஸ்"* என்று முடித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக சீமானிடம் பத்திரிகையாளர்கள்  சற்றுமுன்னர் நடந்த சந்திப்பு ஒன்றில் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்கும் போது, ''லாரன்ஸ் மீதும் அவருடைய சேவை மீதும் எப்போதும் எனக்கு மதிப்பு உண்டு. என் கட்சியைச் சார்ந்த யாராவது ஒருவர் புரிதல் இல்லாமல் விமர்சித்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் அவர் யாரென்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

எனக்கும் என் கட்சிக்கும் கெட்டபெயர் உண்டாக்கும் நோக்கத்தில் பலர் சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளில் இயங்கி வருகின்றனர். அவர்களில்  யாரேனும் கூட இப்படிச் செய்திருக்க வாய்ப்பு அதிகம். இருப்பினும் தம்பி லாரன்ஸிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார் சீமான்.

click me!