அக்கட தேசத்தில் இதய நாயகியை சந்தித்த மிஸ்டர் ஸ்மார்ட்!! கோட்டை மன்னனின் நினைத்துக் கூட பார்க்க முடியாத லீலைகள்!!

By sathish kFirst Published Sep 27, 2018, 6:03 PM IST
Highlights

இந்திய சினிமாவே இப்படியொரு ஹீரோவை இதுவரையில் கண்டதில்லை. ரசிகர்களை கசக்கிப் பிழிந்து கரும்புச்சாறு குடிக்கும் நாயகர்களுக்கு மத்தியில் இவர் வித்தியாசமானவர்.

இந்திய சினிமாவே இப்படியொரு ஹீரோவை இதுவரையில் கண்டதில்லை. ரசிகர்களை கசக்கிப் பிழிந்து கரும்புச்சாறு குடிக்கும் நாயகர்களுக்கு மத்தியில் இவர் வித்தியாசமானவர். படத்துக்கு படம் பொளேர் பஞ்ச் டயலாக் வைத்த வீரமான மனுஷன், ஆனாலும் வயசு வித்தியாசமில்லாமல் அவருக்கு விசுவாசமாய் இருக்கின்றனர் ரசிக கோடிகள். 

கருத்தில் மட்டுமில்லை, காதலிலும் மன்னன் தான் நம்ம அண்ணன். செக்க சிவந்த இவரது நிறத்துக்கும், சான்ஸே இல்லை! ரக பர்சனாலிட்டிக்கும் விழாத ஹீரோயின்களே கிடையாது. கொப்பும் குழையுமாக, மப்பும் மந்திராவுமாக எத்தனையோ பேர் இவரை விரட்டினாலும் இவருடைய டேஸ்ட் என்னவோ ’சைஸ் ஜீரோ’ ரக நாயகியிடம்தான் இருந்தது. ’அது பொண்ணாய்யா அது, ஆம்பளை மாதிரி நடையும், உடம்பும்’ என்று சீனியர் இயக்குநர்களால் விரட்டி ஒதுக்கப்பட்டவர். 

அம்மணியிடம் எந்த விஷயத்தில் விழுந்தாரோ தெரியவில்லை நம்ம மிஸ்டர் ஸ்மார்ட்டுக்கு அப்படியொரு கிரேஸ் இந்த பொண்ணு மேலே. இரண்டு பேரும் ஈருடல் ஓர் உயிராக! இல்லை, இல்லை, ஓருடல் ஒரே உயிராக இறுகக் கட்டிக்  கொண்டு வாழ்ந்தார்கள். சத்தியமாய் அவர்களுக்கு தெரியும் இது காதலுமில்லை, வெள்ளரிக்காயுமில்லை என்று. ஆனால் கசியக் கசிய கருமாந்திரம் பொங்கி வழிந்தது. 

ஒரு மாசம், ரெண்டு மாசமில்லை கிட்டத்தட்ட மூணு நாலு வருடங்கள் இப்படித்தான் வாழ்ந்தார்கள். ‘ஹெட்டு கை பட்ட பிறகுதான் பொண்ணு கொஞ்சம் பொசு பொசுன்னு ஆயிடுச்சு!’ என்று அம்மணியின் மேனேஜர்களே கமெண்ட் அடிக்குமளவுக்கு நிலை இருந்தது. 

பீக்கில் இல்லாவிட்டாலும் கூட பாதகமில்லாமல் ஃபீல்டில் வலம் வந்து கொண்டிருந்த அந்த அம்மணிக்கு ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் நின்றன. அதிலிருந்து சில வருடங்களில் அண்ணனும் வேறொரு பொண்ணை உருகி உருகி காதலித்துக் கரம் பற்றினார். அதன் பிறகு அவரது வாழ்க்கை எப்படியெப்படியெல்லாமோ மாறிவிட்டது. வருடங்களும் உருண்டோடிவிட்டன. 

இந்நிலையில்தான் அந்த வாசமான பட ஷூட்டிங்குக்காக அக்கட பூமியோரமாக மாசக்கணக்கில் ஒதுங்கினார் அண்ணன். ஒரு நாள் இரவில் வாட்ஸப் நம்பரில் ‘ஹெல்லோ’ என்றது ஒரு புது நம்பர். டி.பி.யை பார்த்தால்....சக்கை போடு போட்ட இவரது பழைய காதல் படத்தின் ஸ்டில் இருந்தது. சின்ன ஆர்வத்துடன், ‘யார் இது?’ என்று இவர் ஆங்கிலத்தில் கேட்க...ரா! ரா! என்றது பொண்ணு. அடுத்த நொடி அங்கிருந்து அண்ணனுக்கு அழைப்பு வந்தது. இவர் எடுக்கவில்லை. சுமார் அரைமணி நேரம் கழித்து அதே சுவாரஸ்யத்தில் அழைத்தால்...’இதயமே! என் இதயமே!’ என்று உருகியது காலர் டியூன். 

புரிந்த நொடியில் தல முதல் பாதம் வரை அண்ணனுக்குள் புது வெள்ளம் பாயந்தது. ரோமங்களும் சிலிர்த்துக் கொண்டு நின்றன. வேறெதுவும் பேசலை ‘எங்கேயிருக்க? நான் உன்ன இப்பவே பார்க்கணும்.’ என்றார். ‘ நீ என்ன இப்பவே பார்க்க நினைப்பேன்னு தெரிஞ்சுதான், நீ தங்கியிருக்கிற ஹோட்டல்லேயே தங்கியிருக்கேன். ஓப்பன் தி டோர்’ என்றது லேடி. திறந்தார், வயசுக்கேற்ற வளங்களுடன் அம்மணி. ஒரு காலத்தில்  ஏற்ற இறக்கமில்லாத கதவுகள் போல் இருந்தவர் இன்று சற்றே தளர்ந்தது போல் பருத்தும், விரிந்தும், கவிழ்ந்தும் இருந்தார். உணர்ச்சி பொங்கிட, ‘ரா! ரா!’ என்றார் அண்ணன் 

கதவுகள் தாழிட்டப்பட்டன! நெடுநாள் ஏக்க உணர்வுகள் பொங்கிப் பொங்கி வழிந்தன. 
மறுநாள் அதிகாலை கதவை திறந்து கொண்டு வந்தார் அம்மணி. அவரை போர்த்தியிருந்தது ஹெட்டின் டீ ஷர்ட்டும், லுங்கியும். 
தலைவனின் உதவியாளர்களுக்கு எல்லாம் புரிந்தது, ஆனால் எதுவுமே தெரியாதது போல் திரும்பிக் கொண்டனர். 

ஹும்! வீடு வரை விவகாரம் தெரியாமலிருந்தால் சரி.

click me!