விமர்சனங்களை தாண்டி சிம்டான்காரன் செய்த சாதனை! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Published : Sep 27, 2018, 04:39 PM IST
விமர்சனங்களை தாண்டி சிம்டான்காரன் செய்த சாதனை!  மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

சுருக்கம்

தளபதி விஜய் நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளிக்கு அதிரடியாக களமிறங்கவிருக்கும் சர்கார் திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. 

தளபதி விஜய் நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளிக்கு அதிரடியாக களமிறங்கவிருக்கும் சர்கார் திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. விஜய் நடிப்பில் மெர்சலுக்கு பிறகு வரவிருக்கும் படம் இது என்பதாலும், ஏ.ஆர்.ரஹ்மான் இசை, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம், சமுதாய அக்கறை கொண்ட கதைக்களம் என பல ப்ளஸ்கள் இந்த திரைப்படத்தில் இருப்பதாலும் சர்கார் ரிலீசுகாக எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

அந்த எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரிக்கும் வகையில் சமீபத்தில் வெளியாகி இருந்தது சர்கார் படத்தின் சிங்கிள் ட்ராக். சிம்டாங்காரன் எனும் இந்த பாடல் விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்படியாக அமையவில்லை என்றாலும் கூட நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்பது தான் உண்மை.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை இந்த பாடலுக்கு ப்ளஸ் ஆகவும், விவேக்கின் பாடல் வரிகள் அர்த்தம் புரியாதபடி அமைந்திருப்பது மைனசாகவும் பொது விமர்சகர்களால் விமர்சிக்கப்பட்டிருந்தபோதும் கூட , இந்த சிங்கிள் ட்ராக் மிகப்பெரிய அளவிலான ரீச்சை பெற்றிருக்கிறது.

இதுவரை இந்த பாடலை ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்திருக்கின்றனர். ஒரு கோடி ஹிட்சை கடந்து முன்னேறிக்கொண்டிருக்கும் இந்த பாடல் தான் , அதிகம் லைக்குகளை பெற்ற ஆடியோ வெர்ஷன் என்று தற்போது பெயர் வாங்கி இருக்கிறது. என்ன தான் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வழக்கம் போல வெற்றிநடை போட்டு தான் போய்க்கொண்டிருக்கிறது தளபதியின் படத்தின் பாடல் என இந்த சந்தோஷமான விஷயத்தை கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!