இலங்கைக்கு சென்று காமெடி நடிகர் சதீஷ் செய்த காரியம்! குவியும் பாராட்டு!

By manimegalai aFirst Published Sep 27, 2018, 3:57 PM IST
Highlights

காமெடி நடிகராக திரைப்படங்களில் கலக்கிவரும் நடிகர் சதீஷ், சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவான நபர். பிக் பாஸ் முதல் அரசியல் வரை எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி அதில் தன்னுடைய சூடான சுவையான கருத்துக்களை பதிவு செய்வது இவரின் வழக்கம்.

காமெடி நடிகராக திரைப்படங்களில் கலக்கிவரும் நடிகர் சதீஷ், சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவான நபர். பிக் பாஸ் முதல் அரசியல் வரை எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி அதில் தன்னுடைய சூடான சுவையான கருத்துக்களை பதிவு செய்வது இவரின் வழக்கம்.
இந்த ஆண்டு மட்டுமே கலகலப்பு-2, மிஸ்டர் சந்திரமெளலி, தமிழ்படம்2.0, கஜினிகாந்த் என பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் இவர். மேலும் பல திரைப்படங்களில் நடிப்பதற்கும்  கமிட் ஆகி இருக்கிறார் சதீஷ்.

இவர் சமீபத்தில் இலங்கைக்கு சென்றிருக்கிறார். படப்பிடிப்புக்காக சென்றாரா? அல்லது சுற்றுலாவுக்காக இலங்கை சென்றாரா என தெரியவில்லை. ஆனால் அங்கு சென்று அவர் செய்திருக்கும் விஷயம் ஒன்று இணையதளத்தில் பிரபலமாகி இருக்கிறது.

இலங்கையில் இனப்படுகொலை நடந்தபோது அதனை அகிம்சை முறையில் எதிர்த்து உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்ட திரு.திலீபனின் நினைவிடத்திற்கு அருகே நின்று புகைப்படம் எடுத்திருக்கும் சதீஷ் ,அதனை பின்வருமாறு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.” 

நம் சகோதரர்களுக்காக திரு.திலீபன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த இடம். #யாழ்ப்பாணம்” இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் திரு.திலீபனுக்கு தங்கள் அஞ்சலியை செலுத்தி அவரை நினைவு கூர்ந்ததுடன், சதீஷையும் பாராட்டி இருக்கின்றனர்.
 

நம் சகோதரர்களுக்காக திரு.திலீபன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த இடம். 🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/nwrJ1N4Mma

— Sathish (@actorsathish)

click me!