sathyaraj speech in etharkkum thunindhavan press meet : எதற்கும் துணிந்தவன் படக்குழுவின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வு இன்று சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் சத்யராஜ், சூர்யாவுக்கு புது பட்டம் ஒன்றை கொடுத்தார்.
ஜெய் பீம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். குடும்ப செண்டிமெண்ட் கதையம்சம் கொண்ட படங்களை எடுப்பதில் கில்லாடியான பாண்டிராஜ் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
மேலும் திவ்யா துரைசாமி, தேவதர்சினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வினய் வில்லனாகவும், நடிகர் சூரி நகைச்சுவை வேடத்திலும் நடித்திருக்கின்றார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
undefined
தமிழில் தயாராகி உள்ள எதற்கும் துணிந்தவன் (Etharkkum Thunindhavan) படத்தை தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதன்படி இப்படம் வருகிற மார்ச் 10-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் படக்குழுவின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வு இன்று சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் சத்யராஜ், சூர்யாவுக்கு புரட்சி நாயகன் என்கிற புதிய பட்டம் ஒன்றை அளிப்பதாக கூறினார். மேலும் பேசிய அவர், எம்.ஜி.ஆருக்கு பிறகு திரையிலும் நிஜ வாழ்க்கையிலும் நடிகர் சூர்யா ஒரே மாதிரி இருப்பதாக சத்யராஜ் புகழாரம் சூட்டினார்.
இதையும் படியுங்கள்.... Suriya prays for Ukraine : என்ன மனுஷன்யா.... உக்ரைன் மக்களுக்காக பட விழாவில் பிரார்த்தனை செய்த சூர்யா