Suriya prays for Ukraine : என்ன மனுஷன்யா.... உக்ரைன் மக்களுக்காக பட விழாவில் பிரார்த்தனை செய்த சூர்யா

Suriya prays for Ukraine : உக்ரைனில் போர் தீவிராமடைந்து வரும் நிலையில், அங்கு சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. 


ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு கூட்டமைப்பான நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் தீவிர முயற்சி செய்துவந்தது. உக்ரைனின் இந்த முயற்சிக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்ய அதிபரி புதின் உத்தரவிட்டார். இதனையடுத்து, உக்ரைனில் 7வது நாளாக தொடர் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து பல்வேறு பொருளாதாரத்தடைகள் விதிக்கப்பட்ட போதிலும் இதை பொருட்படுத்தாமல் தாக்குதலை நடத்தி வருகிறார். 

ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு பின்வாங்காமல் உக்ரைனும் எதிர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த போரின் காரணமாக உக்ரைன் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா இந்த பயங்கரமான தாக்குதலின் காரணமாக இதுவரையில், 5,000 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் பெரும்பாலானவர்கள் ராணுவ வீரர்கள் என்றே கூறப்படுகிறது. அப்பாவி பொதுமக்களுக்கு உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் ரஷ்ய தரப்பிலும் 3000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 

Latest Videos

உக்ரைனில் போர் தீவிராமடைந்து வரும் நிலையில், அங்கு சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், இன்று சென்னையில் நடந்த எதற்கும் துணிந்தவன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சூர்யா, ரசிகர்கள் முன்னிலையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் விரைவில் தாயகம் திரும்ப வேண்டி பிரார்த்தனை செய்தார். அப்போது அங்கிருந்த ரசிகர்களும், பத்திரிக்கையாளர்களும் அவருடன் இணைந்து பிரார்த்தனை செய்தனர்.

இதையும் படியுங்கள்.... Etharkkum Thunindhavan Trailer :வேட்டிய கட்டுனா நான்தான் டா ஜட்ஜு!! எதற்கும் துணிந்தவன் படத்தின் மாஸான Trailer

click me!