
சமூக ஊடகங்கள் பல்கி பெருகி போன இந்நாள்களில் பிரபலங்கள் பலரும் பழைய ஞாபங்களை பகிர்ந்து வருகின்றனர். அவ்வாறு அந்த கால ஸ்டண்ட் மாஸ்டரான ஜூடோ ரத்தினம் பத்திரிக்கை ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில் டி.ஆர் மற்றும் சத்யராஜ் குறித்து கூறிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் திரை உலகில் தன்னிகரற்ற நடிகர் டி. ராஜேந்திரன். இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், வசனகர்த்தா, பாடலாசியர், பாடகர் என தனது படங்களுக்கு தேவையான அனைத்து ரோல்களையும் நிரப்புபவர் டி. ஆர். 80களில் வெளியான இவரது படங்கள் நூறு நாட்களை கடந்தும் திரையரங்குகளில் ஓடி வெற்றி பெற்ற வரலாறும் உண்டு. எமோஷன் கலவையே இவருக்கு எப்போதும் கை கொடுத்துள்ளது. தங்கை உறவை அடிப்படையாக கொண்ட படங்கள் அன்றைய காலகட்டத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
அதேபோல வில்லனாக நடிக்க ஆரம்பித்து தனது எதார்த்த நக்கல் பேச்சால் மக்களை கவர்ந்து ஹீரோவானவர் சத்யராஜ். 90களில் இவர் நடிப்பில் வெளி வந்த பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. அதிலும் அம்மாவாசை கதாபாத்திரம் இன்றும் மனதில் நிற்க கூடியது. இவ்வாறு நற் திறமைகளை கொண்ட இரு நடிகர்கள் குறித்த சுவாரஸ்ய தகவல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சத்யராஜ் வில்லனாக நடித்து வந்த தருணத்தின் போது டி ராஜேந்தர் இயக்கிக் கொண்டிருந்த படத்தில் கமிட் ஆகியுள்ளார். அந்த படத்திற்காக சத்யராஜ் - டி.ஆர் இடையேயான சண்டை காட்சியை ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் படமாக்கி வந்தாராம். அப்போது டி.ராஜேந்திரன் வில்லனை அடிக்கும் காட்சியில் சத்யராஜை வயிற்றில் பலமாக குத்தி விட்டாராம் டி.ஆர். இதனால் ஆத்திரமடைந்த சத்யா ராஜ் 'அடே நாயே நீயெல்லாம் மனுசனா' என திட்டி விட்டு படப்பிடிப்பிலிருந்து பாதியில் கிளம்பி விட்டாராம். பின்னர் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் அந்த படத்தில் நடிக்க வைத்ததாக ஜீவரத்தினம் பேட்டியளித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.