
Karthi 29 Movie Update : தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மெய்யழகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து கடந்த மாதம் ரிலீஸ் ஆன நானியின் ஹிட் 3 படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார் கார்த்தி. இதைத்தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகும் சர்தார் 2 படத்திலும் நடித்து வந்தார் கார்த்தி. இப்படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு அண்மையில் பாங்காக்கில் நடைபெற்றது. அத்துடன் படப்பிடிப்பையும் நிறைவு செய்தனர்.
நடிகர் கார்த்தி அடுத்ததாக தனது 29வது படத்தில் நடிக்க உள்ளார். அப்படத்தை டாணாக்காரன் படத்தின் இயக்குனர் தமிழ் இயக்க உள்ளார். இவர் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். இப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்க உள்ளனர். இப்படத்தில் நடிகர் கார்த்தி உடன் ஜெயராம், நிவின் பாலி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற ஜூலை மாதம் தொடங்க திட்டமிட்டு இருந்தனர்.
கார்த்தி 29 திரைப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் பற்றிய ஒரு மாஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் இலங்கை - ராமேஸ்வரம் கடற்பகுதியில் வாழ்ந்த கடற்கொள்ளையர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட உள்ளதாம். கார்த்தியின் கேரியரில் முக்கியமான படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தில் திறமை வாய்ந்த கலைஞர்கள் ஏராளமானோர் பணியாற்ற உள்ளார்களாம். படமும் மிக பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாம். இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்தி 29 படத்தில் நடித்து முடித்ததும் நடிகர் கார்த்தி, அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள கைதி 2 படத்தில் நடிக்க இருக்கிறார். அப்படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளது. இதுதவிர தெலுங்கில் ஹிட் 4 என்கிற திரைப்படத்திலும் ஹீரோவாக நடிக்க கமிட்டாகி உள்ளார் கார்த்தி. மேலும் இவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்துள்ள வா வாத்தியார் என்கிற திரைப்படமும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. அதன் படப்பிடிப்பும் கொஞ்சம் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி அரை டஜன் படங்களுடன் செம பிசியான ஹீரோவாக வலம் வருகிறார் கார்த்தி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.