சசிகுமார் ஜோடியாக ஹன்சிகா... தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ்...

Asianet News Tamil  
Published : Mar 18, 2017, 07:51 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
சசிகுமார் ஜோடியாக ஹன்சிகா... தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ்...

சுருக்கம்

sasikumar movie

கிராமத்து கதைகளை தேர்வு செய்து வெற்றி படங்களை கொடுத்துவருபவர் இயக்குனர் முத்தையா, கடைசியாக விஷாலை வைத்து மருது படத்தை இயக்கிய இவர் தற்போது  சசி குமாரை வைத்து  'கொடிவீரன்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக  முதல்முறையாக ஹன்சிகா நடிக்கவுள்ளார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி தற்போது சிவகங்கை  அருகில் உள்ள கிராமம் ஒன்றில் நடந்து வருகிறது.
 
இந்த படத்தில் சசிகுமாருக்கு தங்கையாக முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.  

சசிகுமார் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு சென்டிமென்ட்  இருக்கும் என்று கூறப்படும் நிலையில் இந்த படம் தங்கச்சி சென்டிமென்டை முன்வைத்து எடுக்கப்படுகிறது.

தங்கச்சி கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் உள்ளதுபோல் திரைக்கதை அமைந்துள்ளதால் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

40 வயதில் இரண்டாவது கர்ப்பத்தை அறிவித்த முன்னணி நடிகை – ரசிகர்கள் வாழ்த்து மழை!
விஜய்-சங்கீதா விவாகரத்து விவகாரம்: ரூ.250 கோடி கேட்ட சங்கீதாவிற்கு ரூ.35 கோடி செட்டில்மென்ட்டா? வெளியான முக்கிய தகவல்!