
இமயமலைக்கு சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் கடந்த வாரம் டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை திரும்பினார்.
அப்போது அதே விமானத்தில் பயணித்த அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா. விமானத்தில் ரஜினிகாந்த் இருப்பதைப் பார்த்ததும், உற்சாகத்தில் தள்ளிக் குதித்தார்.
பின்னர் அவர் அருகில் சென்று தன்னைஅறிமகப்படுத்திக் கொண்டார். அப்போது ரஜினிகாந்த் உடனடியாக எழுந்து நின்று வணக்கம் சொல்லியுள்ளார்.
பின்னர் ரஜினியிடம் பேசிய சசிகலா புஷ்பா, தமிழக அரசியலில் தலைவர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு நல்ல தலைவரை தமிழகம் தேடுகிறது. அந்த ஒரு நல்ல தலைவர் நீங்கள்தான் என்றும், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் நீங்கள்தான் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதையடுத்து சசிகலா புஷ்பாவின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்ட ரஜினிகாந்த், ரொம்ப சந்தோஷம் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.