
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன், ஜான் விஜய், அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் வேற லெவலுக்கு ஹிட்டடித்துள்ளது.
இதில் வேம்புலி, கபிலன் கதாபாத்திரங்களுக்கு அடுத்தபடியாக மக்கள் மனதில் பசுபதி நடித்த ரங்கன் வாத்தியார் கதாபாத்திரம் ஆழமாக பதித்துள்ளது. இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் கடந்த சில நாட்களாக இவரது டெம்ப்லேட் தான் மீம் கிரியேட்டர்கள் வச்சி செய்து வருகின்றனர். வாத்தியாரே ஏன் நடந்து போரிங்க வாங்க சைக்கிள்ல போலாம்… எனும் வரியை வைத்து நெட்டிசன்கள் விதவிதமான மீம்ஸ்களை அள்ளித் தெரிவித்து வருகின்றனர்.
இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் துரைக்கண்ணு வாத்தியாரின் மாணவராக வரும் வேம்புலி தங்களது வாத்தியாரை சைக்கிளில் வைத்து ரவுண்டு அடித்துள்ளார். இந்த போட்டோஸ் தற்போது சோசியல் மீடியாவில் வேற லெவலுக்கு ட்ரெண்டாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.