'சார்பட்டா பரம்பரை' பார்ட் 2 எடுக்கப்படுமா? இன்ப அதிர்ச்சி கொடுத்த பா.ரஞ்சித்..!!

By manimegalai aFirst Published Aug 9, 2021, 12:17 PM IST
Highlights

பா.ரஞ்சித் இயக்கத்தில், கடந்த மாதம் 22 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள 'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்படுமா? என பல ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் பா.ரஞ்சித் ரசிகர்களை பரவச படுத்தும் விதமாக பதிலளித்துள்ளார்.
 

பா.ரஞ்சித் இயக்கத்தில், கடந்த மாதம் 22 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள 'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்படுமா? என பல ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் பா.ரஞ்சித் ரசிகர்களை பரவச படுத்தும் விதமாக பதிலளித்துள்ளார்.

பா.ரஞ்சித் திரைப்படங்கள் என்றாலே இப்படி தான் இருக்கும் என ரசிகர்கள் மனதில் ஒரு கண்ணோட்டம் இருக்கும், ஆனால் தன்னால் இப்படி பட்ட படங்களிலும் பட்டையை கிளப்ப முடியும் என சார்பட்ட படத்தின் மூலம் நிரூபித்திருந்தார் இயக்குனர் ரஞ்சித். வழக்கமான தன்னுடைய பாணியில் இருந்து விலகி, குத்து சண்டை விளையாட்டை மையப்படுத்தி இயக்கி இருந்த இப்படத்தில், 1970வது-களில் வடசென்னை வாழ்வியலையும், அப்போதைய ரோஷமான விளையாட்டான பாக்ஸிங் விளையாட்டையும் தத்ரூபமாக கண் முன் காட்டி இருந்தார். 

மேலும் செய்திகள்: நீச்சல் குளத்தில் பிகினி உடையுடன்... பிரைடல் ஷவர் கொண்டாடிய வித்யுலேகா ராமன்!! வைரலாகும் போட்டோஸ்..!!
 

இந்த விளையாட்டை விளையாடுவதற்காக சில பரம்பரையை சேர்ந்தவர்கள் இருந்தாலும்,  இவர்களில் குறிப்பாகா 'சார்பட்டா பரம்பரை'  மற்றும் 'இடியப்ப பரம்பரையை 'மையமாக வைத்து இந்த  படம் எடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்த சில சர்ச்சைகள் கிளம்பினாலும்... பின்னர் ஓய்ந்தது.

மேலும் செய்திகள்: பிரபல நடிகர் திடீர் மரணம்..! அதிர்ச்சியில் திரையுலகினர்..!
 

எனினும் இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாகவும், இந்த படத்தில் நடித்திருந்த ஒவ்வொருவரின் கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாகவும், இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுமா? என ரசிகர்கள் பலர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதுகுறித்து பதிலளித்துள்ள பா.ரஞ்சித், சார்பட்டா பரம்பரை' படத்தில் வைக்க முடியாத சில காட்சிகளை முன்கள கதையாக வைத்து படமெடுக்க யோசித்துள்ளதாகவும், அதாவது 1925ல் ஆரம்பமாவது போல் கதை இருக்கும்...  திரைப்படமாகவோ அல்லது வெப் சீரியஸாகவோ எடுக்கும் எண்ணம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இவரது இந்த பதில், ரசிகர்களை சந்தோசப்படுத்தியுள்ளது. 
 

click me!