
தளபதி விஜய் நடைப்பில் வெளியாக இருக்கும் சர்கார் திரைப்படம், இந்த ஆண்டு தீபாவளிக்கு கோலாகலமாக ரிலீசாகவிருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மாஅன் இசையில் , விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் இந்த படம் தான் இந்த ஆண்டு கோலிவுட் வட்டாரத்தையே பேராவலுடன் காத்திருக்க வைத்திருக்கும் தளபதியின் திரைப்படம்.
இந்த சர்கார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ,வரும் அக்டோபர் 2ம் தேதி நடைபெற இருக்கிறது. பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் இந்த இசைவெளியீட்டு விழா சாய்ராம் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தயாராகி வரும் நிலையில், இன்று சர்கார்க் திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் சிம்டாங்காரன் எனும் பாடல் ரிலீசாக இருக்கிறது.
இந்த சிம்டாங்காரன் எனும் வார்த்தையே புதுமையாக இருப்பதால், இதன் அர்த்தம் என்ன? என அறிந்து கொள்ள ஆர்வமுடன் இருந்த விஜய் ரசிகரகளுக்காக, ஒரு டிவிட்டர் ட்வீட்டை வெளியிட்டிருக்கிறது சர்கார் படக்குழு. அதில் சிம்டாங்கரன் எனும் இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என விளக்கி கூறி இருக்கின்றனர்.
இந்த சிம்டாங்காரன் எனும் இந்த வார்த்தை சென்னை தமிழ் வார்த்தை என்றும் , அதற்கு கவர்ந்து இழுப்பவன் , பயமற்றவன் , துடுக்கானவன் என்று அர்த்தம் என்றும் தெரிவித்திருக்கின்றனர். மொத்தத்தில் “கண் சிமிட்டாம சிலர பார்க்க தோனுமே.. அந்த ஒருவன் .. நம் #சிம்டாங்காரன்” என கூறி இருக்கின்றனர் சர்கார் குழுவினர்.
இங்கு சொல்லப்பட்டிருக்கும் விளக்கத்தை வைத்து பார்க்கும் போது, இது தளபதி விஜய்க்கு மிக பொருத்தமான ஒரு வார்த்தை, என கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.