கார்பரேட் அரசியலை முறியடிக்க கார்பரேட் கிரிமினால் மட்டுமே முடியுமா? ஜாம்பவான்களை டேமேஜ் பண்ணிய சர்கார்...

By sathish kFirst Published Nov 8, 2018, 11:44 AM IST
Highlights

சர்கார் அறுவடைக்கு கிளம்பியுள்ள ஒரு கார்பரேட் கார் அவ்வளவுதான்... இந்த கதைக்குத் தான் இத்தனை சண்டையா சரி அதவிடுங்க ஒரு முதல்வர்பதவிக்கு இவ்ளோ சண்டையங்கிற மாதிரி தான் படம் இருக்கு!

"சர்கார்" அறுவடைக்கு கிளம்பியுள்ள ஒரு கார்பரேட் கார் அவ்வளவுதான்! என முகநூலில் ஒருவர் விமர்சனம் பதிவிட்டுள்ளார்.

அதில், இந்த படத்தில் எனக்கு பிடிச்ச மிக முக்கியமான வசனம் i am கார் பரேட் கிரிமினல் சொல்ராரு பாரு விஜய் அது மட்டும் தாங்க உண்மை அந்த அளவுக்கு படத்தில் விசயம் இருக்கு...

அரசியலை நேரடியாக பேசி நடந்து முடிந்த அரசியல் நாடகங்களையும் காட்சிகளாக்கி சர்ச்சை, மற்றும் விளம்பர வித்தையில் மறுபடியும் ஒரு ஹீரோயிசம் வெல்ல துடிக்கும் பேராசையின் உச்சம் தாங்க சர்கார்..

கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சையின் செல்வாக்கு பேரையும் பயன்படுத்தி ஜெயமோகனின் ஆதர்சனமான சுந்தர ராமசாமியின் அறிவு பிம்பத்தையும் பயன்படுத்தி ஒரு சூட்சமும் நோக்கமும் தெரிந்து விடாத அளவுக்கு ஒரு அரசியல் நாடகம் தான் சர்கார் எனும் திரை வடிவமும் என்பது எனது சிறு யூகம்

கண்டெய்னர் பணத்திலிருந்து துவங்கி ஈழத்துக்காக ஊயிர் நீத்த முத்துக்குமார் பெயரையும் சாட்டை Comல் சேர்த்து குறிப்பாய் திருநெல்வேலிகந்து வட்டி கொடுமையில் தீயில் கருகிய உயிர்களின் அவலத்தையும் கலந்து பொதுப்பணித்துரை டெங்கு சாவுகளில் வில்ருந்து மின்சாரத் துறை குழந்தை இறப்பு வரை நடந்து முடிந்த அத்தனை சகிக்க வே முடியாத சம்பவங்களையும் படமாக்கி நடிகர் விஜய் ஒற்றை விரல் புரட்சிக்கு வித்திடுகிறார் படமும் நல்ல விலைக்கு வித்தும் விட்டார் ஏன்னா இப்ப வரைக்கும் எங்கேயுமே டிக்கட் கிடக்கலை காரணம் நம்மாழ்வார் போற்றிய ஒற்றை வைக்கேல் புரட்சி அல்ல இதுகட் அவுட்டுக்கு பால் ஊற்ற வைக்கும் ஒற்றை விரல் புரட்சி.

அதாங்க முக்கிய வசனமா வருதே ஒத்த ஆள் கூட்டமா மாறுவதும் கூ ட்டம் ஒத்த ஆளாக மாறுவதும் இப்ப ஒரு நாள் ல நடக்கும்னு விஜய் காட்டும் உடல் மொழியும் அடடே..உண்மையிலேயே இப்ப நினைச்சாலும் புல்அரிக்குதுங்க மூளை முழுக்க ...

சரியாக சொல்லனும் சொன்னா? இந்த படக்கதை வருண்ராஜ் கதையும் ல்ல  மூளை வலிக்க எழுதும் முருகதாஸ் கதையும் இல்ல நடந்த சம்பவங்கள தொகுத்து விஜய்யின் வருங்கால கதைக்காக (ஆசைக்காக, இப்ப வந்திருக்கிர 2.30 மணி நேரட்ரலர் தாங்க சர்கார்.

இந்த படத்துல சின்ன அருமையும் பெருமையும் என்னன்ன?49 - 0நோட்டா பிரபலம் ஆனதுமாதிரி கள்ள ஓட்ட நல்ல ஒட்டாக மீட்டுகிற 49 Bசட்டத்தை பிரபலம் ஆக்கினது தான்ங்க இந்த படத்துல எதுக்கு கதாநாயகி னு தளபதியோட தொண்டர்கள் தான் பதில் சொல்லனும் ரெண்டு குத்தாட்டத்திற்கு கதாநாயகி தான் வேணுமா என்ன? பாவம் கீர்த்தி சுரேஷ்

அரசியல் பலத்திற்காகவே நேரடி அரசியல்வாதியான அதுவும் அஇமு மாக வாக கட்சியின் பெயரையும் காட்டி பல கருப்பையாவையே நடிக்க வைத்திருப்பது படத்திற்கு வலு சேர்த்துள்ளது பாப்பா வக, சின்னம்மா வாக, அம்மாவாக, ஹாஸ் பட்டல் மர்ம த் ரிலீன் அம்மாவாகவும் வரலட்சுமியை காட்டி இருப்பது முருகதாஸின் அரசியல் சினிமாவின் மேதாவித்தனத்தையும் காட்டுகிறது கலை தாகத்தையும் காட்டுகிறது

அதே மாதிரி நம்பர் - டூவாக ராதாரவி நெடுஞ்செயனையும் அன்பழகனையும் மாறி மாறி காட்டி பிராண்ட் தத்துவம் பேசி அரசியல்வாதியாகவும் அரசியல்வாதியாக நடிக்கவும் செய்துள்ளார். என்ன அரசியல் பேசினாலும் ஹர்ஸ்பிட்டல் பெட்டுகளை காட்டி ஜென்டிமண்ட் செய்தாலும் இந்த சண்டை காட்சிகள் அதுவும் காற்றில் பறக்கிற உடல்கள் சினிமா கிருக்குத் தனத்தின் உச்சமாகவே இருக்கிறது.

55 வருச அரசியல் வாழ்க்கை னுராதாரவி சொல்லும் வசனம் கருணாநிதி, எம்ஜிஆர் அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா இத்தனை பேரையும் அந்த வருட கணக்கு ஞாபகபடுத்துங்க.

மீனவர்கள் துப்பாக்கி சூடு தக்காளி அரசியலில் விவசாய அக்கறை மாவட்டத்து ஒரு பிரச்சனையான மீத்தேன் , ஹைட்ரோ ஹார் பன், முல்லை பெரியாரு காவிரி, கந்து வட்டி, மணல் கொள்ளை என ஒட்டு மொத்த பரச்சனையும் பேசி அதற்கு ஒரு காரண சக்கரமான அரசியல் வாதிகளையும் இனம் கண்டு அதற்கு மூலக் காரணமான கார்பரேட் அரசியலை முறியடிக்க ஒரு கார்பரேட் கிரிமினால் மட்டுமே முடியும் என்பதை வலுவாக சொல்லும் அயோக்ய தனத்தின் உச்சம் தாங்க சர்க்காரின் ஒற்றை விரல் புரட்சி

கருவறை கிரிமினல்களுக்கும் கார்பரேட் கிரிமினல்களுக்கு நடக்கிற யுத்தத்தில் ஒரு சிறு பகுதி இந்த சினிமா அதையும் புரட்சியாக இளைய தளபதியை புரட்சி தலைவராக சித்தரிப்பது என்பது விஜய்யின் லாபவெறிவணிகத்தை மட்டுமல்ல அரசியல் பேராசையின் உச்சத்தையும் காட்டுகிறது சர்க்கார்.

இறுதியாக ஒன்று எம்ஜிஆர் தொடங்கி, கருணாநிதி இறப்பு, சின்னம்மா, பெரியம்மா, அரசியலில் கபளீகரம் கொண்ட அத்தனையையும் சீண்டி விட்டு அதன் தொடர்ச்சியாக i a ma கார்பரேட் கிரிமினல் என வந்து நிற்கும் விஜய்யை - யார் என கட் அவுட்டுக்கு பால் ஊற்றும் பக்தர்களுக்கு தெரியாமல் போகலாம் ஜல்லிகட்டு போராட்டத்தை போன்ற நெடு வாசல் போன்ற நீட் போன்ற மீத்தேன் போன்ற போராட்டங்களில் பங்கெடுத்த, பாதிக்கப்பட்ட போராளிகளுக்கும் மக்களுக்கும் தெரியாமல் போக வாய்ப்பில்லை என்றே நம்புகிறேன்.

போராட்ட எழுச்சிகள் ததும்பி நிற்கும் இந்த காலகட்டத்தில் அதை அறுவடை செய்வது யார் எனும் போட்டியில் ஓர் ஆள்தான் இந்த கார்பரேட் கிரிமினல். சர்க்கார் போன்ற சினிமாக்கள் மக்களை போராளி ஆக்காது ஒரு போதும் மாறாக உங்களை ஏமாளியாக்கும்... நீங்கள் போராளியா? ஏமாளியா? கோமாளியா? அல்லது அறிவாளியா? யார் நீங்கள்?

click me!