விஸ்வாஸம் ஷூட்டிங் ஸ்பாட்டில் டான்சர் மரணம்... அழுது தீர்த்த அஜீத்!

Published : Nov 08, 2018, 11:19 AM IST
விஸ்வாஸம் ஷூட்டிங் ஸ்பாட்டில் டான்சர் மரணம்... அழுது தீர்த்த அஜீத்!

சுருக்கம்

விஸ்வாஸம்’ படப்பிடிப்பின்போது இறந்த டான்சர் ஒருவருக்கு சுமார் எட்டுலட்ச ரூபாய் வரை அஜீத் செலவழித்த தகவலை அவரது ரசிகர் மன்றத்தினர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர். மேலும் அந்த டான்சருக்கு சிகிச்சை அளித்தபோது அவரை விட்டு எங்கும் நகராமல் காத்திருந்தாராம் அஜீத்.

விஸ்வாஸம்’ படப்பிடிப்பின்போது இறந்த டான்சர் ஒருவருக்கு சுமார் எட்டுலட்ச ரூபாய் வரை அஜீத் செலவழித்த தகவலை அவரது ரசிகர் மன்றத்தினர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர். மேலும் அந்த டான்சருக்கு சிகிச்சை அளித்தபோது அவரை விட்டு எங்கும் நகராமல் காத்திருந்தாராம் அஜீத். 

அஜீத்தின் விஸ்வாஸம் படத்தின் இறுதி பாடல் காட்சி புனே அருகே நடந்து வந்தது. அந்தப் பாடல் முடிந்தால் பூசணிக்காய் உடைத்துவிட்டு யூனிட் சென்னைக்கு பேக் அப் ஆகவேண்டிய நிலை. இந்நிலையில் பாடல் காட்சி நடந்துகொண்டிருந்தபோது ஓ.எம். சரவணன் என்கிற டான்சர் ஷாட்டின்போது ரத்தவாந்தி எடுத்தபடி மயங்கிவிழுந்தார். 

பதறிய அஜீத் உடனே சரவணனை தனது காரில் அள்ளிக்கொண்டு புனே தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சரவணன் காலமானார். அவரது மறைவைத் தாங்கமுடியாமல் கண்ணீர் விட்டு அழுத அஜீத், தனது சொந்தச்செலவில் சரவணன் உடலை சென்னைக்குக் கொண்டுவந்தார். அதுமட்டுமின்றி சைதாப்பேட்டையில் அவாது இறுதி அடக்கம் நடைபெறும் வரை உடனிருந்து அத்தனை செலவுகளையும் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டதோடு, அவரது குடும்பத்தினருக்கும் நிதி உதவி செய்தார். அஜீத் ரசிகர் மன்றத்தினர் இச்செய்தியை பகிர்ந்து நெகிழ்ந்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கடத்தப்படும் கிரிஷ்... விஜயா மீது முத்துவுக்கு வந்த டவுட்; கடத்தியது யார்? - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!