
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சர்கார்'. இந்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் மிகப்பிரமணடமாக வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது 'செங்கோல்' படத்தின் கதை போன்றே உள்ளது என்றும், அதனால் இந்த படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று கூறி, எழுத்தாளரும், துணை இயக்குனருமான வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் நடிகர் விஜய்யின் சர்கார் திரைப்படத்திற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது தீர்ப்பு வழங்கியதால் விஜய் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். இதனையடுத்து 'சர்கார்' படத்தின் சென்சார் தகவல் குறித்த தகவலை, சர்கார் பட தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் வெளியிட்டுள்ளது. சர்கார் படத்திற்கு... யுஎ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.