ரூ.60 லட்சத்தில் வீடு; இதுவரையில் இல்லாத பிரம்மாண்ட பரிசு - சரிகமப சீனியர்ஸ் 5 வெற்றியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

Published : Jul 08, 2025, 08:51 PM IST
Sa Re Ga Ma Pa Seniors 5 Prize Money

சுருக்கம்

SaReGaMaPa seniors 5 Prize Money : சரிகமப சீனியர்ஸ் 5 ரியாலிட்டி ஷோவில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SaReGaMaPa seniors 5 Prize Money : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் சரிகமப சீனியர்ஸ் 5. இந்நிகழ்ச்சியில் வெற்றியாளர்களுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு ஏராளமான பரிசுகளை அறிவித்துள்ளது. அது என்ன என்று பார்க்கலாம். சரிகமப சீனியர்ஸ் 5 ரியாலிட்டி ஷோவை அர்ச்சனா தொகுத்து வழங்கிறார். ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், ஸ்வேதா மோகன் என்று பலரும் நடுவர்களாக பங்கேற்றனர். இதில், மொத்தமாக 28 போட்டியாளர்கள் இடம் பெற இந்நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார். அதுமட்டுமின்றி இந்த ரியாலிட்டி ஷோ மூலமாக பிரபலமானவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்.

ஒவ்வொரு வாரமும் காலத்தால் அழியாத,பக்தி பாடல்கள், மெலடி, காதல் பாடல்கள், காவிய பாடல்கள் என்று புதுவிதமான தலைப்புகளுடன் இந்த ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பு செய்யப்படுகிறது.ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான சுற்றுகளில் போட்டியாளர்கள் தங்கள் இசைத் திறமையை வெளிப்படுத்தி, மக்களின் மனதைக் கவர்ந்து வருகின்றனர். சாமானிய போட்டியாளர்களை சாதனையாளர்களாக மாற்றும் ஒரு மேடையாக இந்த நிகழ்ச்சி திகழ்கிறது. இதுவரையில் கடந்த 4 சீசன்களாக இல்லாத வகையில் இந்த ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வெற்று பெறும் போட்டியாளர்களுக்கு சிறப்பு பம்பர் பரிசு காத்துக் கொண்டிருக்கிறது.

ஆம், இந்த சீசனில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு ரூ.60 லட்சம் மதிப்புள்ள ஒரு வீடு பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண குடிமகன் ஒவ்வொருவருக்கும் வீடு கட்டுவது என்பது பெரிய கனவு. அப்படி இருக்கும் போது ரூ 60 லட்சம் மதிப்புள்ள வீடே பரிசாக கிடைக்க போகிறது என்பது போட்டியாளர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக பல சேனல்களில் ரியாலிட்டி ஷோக்களில் வீடுகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

அப்படி கொடுக்கப்படும் வீடுகளுக்கு கண்டிப்பாக டாக்ஸ் கட்ட வேண்டும். அதன்படி வெற்றி பெறும் போட்டியாளருக்கு ரூ.60 லட்சம் மதிப்பில் வீடு கொடுக்கப்படும் நிலையில் அதற்குரிய வரி அந்த போட்டியாளரிடம் வசூலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  2ஆவது இடத்தை பிடிக்கும் போட்டியாளருக்கு ரூ.10 லட்சம் காத்துக் கொண்டிருக்கிறது. 3ஆவது இடத்தை பிடிக்கும் போட்டியாளருக்கு ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்கம் வழங்கப்படும். இவற்றுடன், மக்களின் மனம் கவர்ந்த ஒரு போட்டியாளருக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் சிறப்புப் பரிசாக வழங்கப்பட உள்ளது.

இந்த அறிவிப்பு சரிகமப சீனியர்ஸ் 5 போட்டியாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்த சீசன் பார்வையாளர்களுக்கும் கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தப் பிரம்மாண்டமான பரிசுகள், போட்டியாளர்களின் திறமைக்குக் கிடைக்கும் பாராட்டுகளை மேலும் சிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

சந்தானம் என் சகோதரன் : மறைந்த டாக்டர் சேதுராமனின் மனைவி உருக்கம்: கண்கலங்க வைக்கும் பின்னணி!
நண்பன் வெங்கடேஷுக்காகக் கொள்கையை மாற்றிய பாலகிருஷ்ணா: விஸ்வரூபமெடுக்கும் 'வாவ்' கூட்டணி!