
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சரவணன் மீனாட்சி சீரியலுக்கு இளைஞர்கள் பலர் தீவிரமான ரசிகர்கள். இந்த சீரியலில் பல கதாநாயகர்கள் மாறினாலும்கூட விடாமல் தொடர்ந்து பார்க்கும் இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை என பலர் உள்ளனர்.
இந்நிலையில் இந்த சீரியல் இயக்கும் அனுபவம் பற்றியும் ராஜா ராணி சீரியல் இயக்கும் அனுபவம் குறித்தும் இயக்குனர் பிரவீன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில்... 'சரவணன் மீனாட்சி ' தொடர் ஸ்ரீஜா , செந்திலில் ஆரம்பித்து இத்தனை வருடம் தொடர காரணம் தற்போது வரை ரசிகர்கள் கொடுத்து வரும் ஆதரவு தான். ஆனால் இந்த சீரியலில் நடிக்க வரும் ஹீரோக்கள் அனைவரும், வெள்ளித்திரையில் ஹீரோவாக நடிக்கச் சென்று விடுகின்றனர். தொடர்ந்து இது போல் பல மாற்றங்கள் ஏற்பட்டு கதை மாற்றங்கள் கூட நடந்தாலும் வித்தியாசமாக நானும் என் குழுவினரும் இதனை எடுத்துச் செல்வதால் ரசிகர்கள் அதரவு கொடுத்து வருகின்றனர் அவர்களுக்கு நன்றி என கூறியுள்ளார்.
மேலும் சரவணன் மீனாட்சி சீரியலில் ரசிகர் ஒருவரின் விடாப்பிடி அனுபவத்தைக் குறிப்பிட்டார் அவர். அதில்... மீனாட்சி சரவணனைத் தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும், வேட்டையனை திருமணம் செய்துகொள்ளக்கூடாது அப்படி நீங்கள் கதையில் மாற்றம் செய்தால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரடினாராம். பின் இயக்குனர் பிரவீன், அந்த ரசிகரிடம் இது கதை தான் நிஜமில்லை என்று விளக்கமாகக் கூறி, சமாதானம் செய்தாராம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.