'உடம்ப கவனமாக பார்த்துக்கோங்க'! ரஜினிக்கு 'அன்பு அட்வைஸ்' செய்த எம்.ஜி.ஆர்.!

 
Published : Dec 12, 2017, 05:17 PM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
'உடம்ப கவனமாக பார்த்துக்கோங்க'! ரஜினிக்கு 'அன்பு அட்வைஸ்' செய்த எம்.ஜி.ஆர்.!

சுருக்கம்

MGR advice to Rajini Kanth

நடிகர் ரஜினிகாந்த் 1979 ஆம் ஆண்டு அன்னை ஓர் ஆலயம் படத்தில் நடித்தார். இந்த படத்தை சாண்டோ சின்னப்பா தேவரின் மருமகன் ஆர்.தியாகராஜன் டைரக்டு செய்தார். ரஜினிகாந்த் யானையுடன் இந்த படத்தில் நடித்தார். தாய்ப்பாசம் என்பது மிருகங்களுக்கும் உண்டு என்பதை மையக் கருத்தாக கொண்டு இந்த படம் வெளியாகியது.

இந்த படத்தை டைரக்ட் செய்த ஆர்.தியாகராஜன், 1979 ஆம் ஆண்டு தீபாவளி நாள் அன்று அன்னை ஓர் ஆலயம் ரிலீசானது. தாய்ப்பாசம் என்பது மிருகங்களுக்கும் உண்டு என்பதை மையக்கருத்தாக்கி வந்த இந்த படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. இந்த படத்தில், நடிகர் ரஜினிகாந்த், சிறுத்தை ஒன்றை தோள் மீது தூக்கிச் செல்லும் காட்சி, மக்களை வெகுவாக கவர்ந்தது என்று கூறியிருந்தார்.

தமிழில் இந்த படம் வெற்றி அடைந்ததை அடுத்து, அம்மா வெருகேனு அம்மா என்ற பெயரில் தெலுங்கிலும் தயாரித்தோம். அந்த படத்திலும் ரஜினி காந்த் நடித்தார். இதுவும் வெற்றிப்படமானது என்றார்.

ரஜினிகாந்த் குறித்து பேசும்போது, சினிமா புகழ் அவரை எப்போதுமே பாதித்ததில்லை. திடீரென எங்கள் ஆபிசுக்கு வருவார். களைப்பாக இருந்தால், எங்கேயாவது ஒரு ஓரத்தில் கையை தலைக்கு வைத்து படுத்துக் கொள்வார். சாதாரண ஓட்டலில் இடியாப்பாம் - பாயா வங்கி வரச்சொல்லி அதையே சாப்பிடுவார்.

அன்னை ஓர் ஆலயம் படத்தில் ரஜினி நடித்த நேரத்தில், தூங்காமல் ஓய்வு எடுக்காமல் உழைத்தார். அவருக்குள் ஒருவித குழப்ப நிலை நீடித்ததை உணர்ந்து கொண்டோம். இதனால் எங்கள் கம்பெனி தயாரிப்பு நிர்வாகி, உதவி இயக்குநர், கார் டிரைவர் மூவரையும எப்போதும் ரஜினியுடன் இருக்க ஏற்பாடு செய்தோம்.

ஆனால், அதையும் தாண்டி ரஜினிக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில், எம்.ஜி.ஆரின் செயலாளராக இருந்த பத்மநாபனிடம் இது குறித்து எங்களின் கவலையைத் தெரிவித்ததோம். இதனைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர்., சத்யா ஸ்டுடியோவுக்கு வந்து ரஜினியை பார்த்து பேசினார். உடம்பு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத முடியும் என்று ரஜினிக்கு அன்புடன் அட்வைஸ் செய்துவிட்டுப் போனார்.

ரஜினியின் 67 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் வேளையில், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., ரஜினிக்கு அட்வைஸ் செய்ததை நினைவு கூறும் வகையில் இது பதிவிடப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!