
பாகுபலி முதல் பாகத்தின் முடிவில், பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்ற ரகசியம் சிலருக்குத்தான் தெரியும் என்றும், பாகுபலி 2 மூலம் அதனை வெளிப்படுத்தி உள்ளோம் என்றும் அதன் இயக்குநர் ராஜமௌலி தெரிவித்துள்ளார்.
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி நடிப்பில் அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் வெளியாகி இந்தியாவின் அதிக வசூல் பெற்ற படமாக இருக்கிறது ‘பாகுபலி’. இந்தப்படத்திற்கு எல்லாத் தரப்பு மக்களிடமும் பாராட்டுகளும், நல்ல விமர்சனங்களும் கிடைத்துள்ளன. பாகுபலியின் இரண்டாம் பாகம், இந்திய சினிமாவில் வசூல் சரித்திரத்தை மாற்றி அமைத்தது.
இதன் முதல் பாகமான பாகுபலி படமும் 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது.
பாகுபலி படம் இந்த மாபெரும் வெற்றி பெற காரணமாக பல்வேறு அம்சங்கள் உள்ளன. முதல் பாகத்தின் முடிவில், கட்டப்பா கதாப்பாத்திரம் பாகுபலியைக் குத்திக் கொல்வது போல் முடிந்திருக்கும். பாகுபலியை குத்தி கொல்வதுபோல் அமைந்த இந்த பின்னணி குறித்த கேள்வியே இரண்டாம் பாகம் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
சாவன் மியூசிக் நிறுவனத்தின் ஆன்லைன் நிகழ்ச்சியான டேக் 2 வித் அனுபமா மற்றும் ராஜீவ் என்ற நிகழ்ச்சியில், இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி கலந்து கொண்டார். கட்டப்பா, பாகுபலியைக் கொன்றது ஏன் என்ற ரகசியத்தைக் கசிய விடாமல் இருந்தது கடினமாக இருந்ததா என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ராஜமௌலி, கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்ற கேள்விக்கு மிபவும் எளிதாக விடை கூறி விடலாம் என்றும், படத்தை இருமுறை நன்கு பார்த்து, கொஞ்சம் புத்திசாலித்தனத்தை செலுத்தினால் தெளிவான பதில் கிடைத்துவிடும் என்றார். அந்த சமயத்தில் பலர் இது தொடர்பாக என்னிடம் டுவிட்டரில் பதில் அளித்திருந்தனர். சிலர் சரியாகவே தெரிவித்தும் இருந்தனர். ஆனால், கட்டப்பா எப்படி பாகுபலியைக்
கொல்லலாம் என்பதே அந்த கேள்வியின் அர்த்தம் என்றும், இதற்கான பதிலே பலரது எதிர்பார்ப்பாக இருந்தது என்றும் ராஜமௌலி குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய ராஜமௌலி, பாகுபலியின் விசுவாசியான கட்டப்பா எந்த நிர்பந்தத்தினால் இப்படி செய்தார் என்ற கேள்விக்கான பதிலை யாராலும் யூகிக்க முடியாது. எங்கள் குழுவிலேயே 10 முதல் 15 பேருக்கு மட்டும்தான் அந்த ரகசியம் தெரிந்திருந்தது.
அமவர்களுக்குத்தான் முழுக்கதையும் தெரியும். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மிக நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடத்தியதால், ஒவ்வொரு காட்சியையும் வரிசைப்படி படமாக்கப்படவில்லை. ஒவ்வொரு காட்சியையும் பல்வேறு அடுக்குகளாகப் படமாக்கினோம். இது படக்குழுவில் இருந்த பலருக்கு குழப்பத்தை உண்டாக்கியது.
இப்படி படமாக்கப்பட்டதை எல்லாம் ஒரு புள்ளியில் இணைப்பது என்பது மிகவும் கடினம். இதன் காரணமாகவே படக்குழுவினர் எவருக்கும் இந்த ரகசியம் தெரியவில்லை. இதன் மூலமே கட்டப்பா, பாகுபலியை கொன்ற ரகசியத்தை கசியவிடாமல் வைத்திருந்தது சாத்தியமாயிற்று. அந்த ரகசியத்தை, இந்த ஆண்டில் வெளியான பாகுபலி 2 மூலம் வெளிப்படுத்தி இருக்கிறோம் என்று ராஜமௌலி கூறியிருந்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.