
ரஜினிகாந்தின் 67வது பிறந்தநாளான இன்று, அவரது இளமைக்காலம் பற்றிய சில தகவல்கள்:
தற்போது சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த், சிறு வயதில் முரட்டு சுபாவம் கொண்டவராக இருந்துள்ளா. இதை அவரே ஒப்புக்கொண்டும் இருக்கிறார். சிறு வயதிலிருந்தே பயம் என்றால் என்ன என்றே அறியாத ரஜினிகாந்த், நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது, பெண்களை விரட்டுவது போன்ற செயல்களில் எல்லாம் ஈடுபட்டுள்ளார்.
மகன், கல்லூரியில் படித்து பட்டம் பெற்று, போலீசில் பெரிய அதிகாரியாக வேண்டும் என்பது ரஜினியின் தந்தை ஆசை. ஆனால், ரஜினிக்கு படிப்பில் அந்தளவிற்கு நாட்டமில்லை. அதனால் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றிக்கொண்டு மகிழ்ச்சியாக இருந்துள்ளார் ரஜினி.
அரும்பிக்கொண்டிருந்த மீசை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மையினால் மீசை வரைந்து கொள்வாராம் ரஜினி. சிகரெட், மது என வாழ்ந்துள்ளார் ரஜினி. இதுபற்றி எல்லாம், பேட்டிகளிலும், கட்டுரைகளிலும் ஒளிவு மறைவு இல்லாமல் ரஜினியே கூறியிருக்கிறார்.
ரஜினி ஒரு கட்டுரையில் அவரது இளமைக் காலம் குறித்து எழுதியது: பிஞ்சிலே பழுத்தது என்பார்களே, அது மாதிரி நான் வளர்ந்தேன். சின்ன வயதிலேயே `செக்ஸ்' என்றால் என்ன வென்று எனக்குத் தெரியும். மிகவும் முரட்டுத்தனமாக இருந்தேன். 16 வயதில் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் சேர்ந்தபிறகுதான் என்னுடைய முரட்டுத்தனம் சற்று குறைந்தது. பிரார்த்தனை, பிராணயாமம் எல்லாம் செய்தபோது, என் சுபாவங்கள் சற்று குறைந்தன.
ஆனால், எஸ்.எஸ்.எல்.சி. முடித்தபின் மீண்டும் மூத்த வயது நண்பர்கள் கிடைத்தார்கள். முரட்டுத்தனம் மறுபடியும் வந்துவிட்டது. முரட்டுத்தனம் என்றால் சண்டை மாத்திரம் அல்ல. நீ ஒரு கிளாஸ் சாராயம் குடிப்பியா? நான் 6 கிளாஸ் சாராயம் குடிப்பேன் என்று சவால் விடுகிற முரட்டுத்தனம். மற்றவர்கள் பார்வையை நம் மீது திருப்பவேண்டும் என்ற வெறி என்று ரஜினியே கூறியிருக்கிறார்.
அந்த வயதிலேயே அனைவரும் நம்மை பிரமித்து பார்க்க வேண்டும் என ரஜினி விரும்பியிருக்கிறார். அன்று நினைத்துள்ளார். இன்று நிறைவேறியிருக்கிறது. உலகமே ரஜினியை வியந்து ரசிக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.