
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 67-வது பிறந்தநாள் இன்று. ரஜினியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடிவருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுதும் உள்ள ரஜினி ரசிகர்கள், அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.
ரஜினியின் பிறந்தநாளான இன்று, அவரது சிறு வயது வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களை பார்ப்போம்.
சிறு வயதிலிருந்தே பயமறியாதவராக வளர்ந்த ரஜினி, முரட்டுத்தனத்துக்கு சொந்தக்காரர். அதேநேரத்தில் அன்புக்கும் அடிமையானவர். அவரது பட தலைப்புகளான முரட்டுக்காளை, அன்புக்கு நான் அடிமை ஆகிய பட தலைப்புகள் அவரின் நிஜ வாழ்க்கையோடு பொருந்தக்கூடியவை.
சிறு வயதிலிருந்தே தன்னைவிட அதிக வயதுடைய நண்பர்களைத்தான் ரஜினி அதிகம் பெற்றிருந்திருக்கிறார். அதை அவரே சொல்லியும் கூட இருக்கிறார். மூத்த நண்பர்களைப் பெற்றதாலேயே பிஞ்சிலே பழுத்தது என்பார்களே.. அப்படியாக வளர்ந்தவன் தான் நான் என்றுகூட ரஜினி சொல்லியிருக்கிறார்.
ரஜினியின் தந்தையோ நன்கு படித்து ரஜினி ஒரு போலீஸ் அதிகாரியாக வேண்டும் என நினைத்துள்ளார். ஆனால், படிப்பில் அதிக நாட்டமில்லாத ரஜினி, நண்பர்களுடன் ஊர் சுற்றிக்கொண்டு தியேட்டரில் படம்பார்த்துக்கொண்டு சுற்றியிருக்கிறார்.
ஒருமுறை, ஒரு பெண்ணை விரட்டிச் சென்றபோது, அந்த பெண் போலீசாரிடம் புகார் செய்ய போலீசாரிடம் மாட்டிக்கொண்டார் ரஜினி. ரஜினியையும் அவரது நண்பர்களையும் போலீஸ் பிடித்து சென்றுவிட்டார்கள். ரஜினியின் தந்தை தலைமை போலீஸ்காரர் என்பதையும், சிறந்த சேவை செய்ததற்காக அரசாங்க விருது பெற்றவர் என்பதையும் அறிந்து கொண்ட போலீசார், ரஜினியை விடுவித்து, வீட்டில் கொண்டுபோய் விட்டனர்.
ரஜினி போலீஸ் அதிகாரியாக வேண்டும் என தந்தை விரும்பினார். ஆனால், ரஜினியோ நண்பர்களுடன் பெண்ணை விரட்டி சென்று போலீசில் சிக்கினார்.
ஆனால், இந்த சம்பவத்தை அறிந்த ரஜினியின் அண்ணன் சத்யநாராயணாவுக்கு அடக்க முடியாத அளவுக்கு கோபம் வந்து ரஜினியை செம அடி அடித்துள்ளார். 9 வயதில் தாயை இழந்த ரஜினிக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் விளங்கியது ரஜினியின் அண்ணன் சத்யநாராயணாவும் அவரது மனைவியும்தான். எனவே சத்யநாராயணா என்னதான் அடித்தாலும், அடுத்த சில நிமிடங்களில் சமாதானமாகி அண்ணன் பக்கத்தில் அமர்ந்துவிடுவாராம் ரஜினிகாந்த்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.