Santhanam New Movie: புதுவை முதல்வரை சந்தித்து ஆசி பெற்ற கையேடு சந்தானம் வைத்த முக்கிய கோரிக்கை! என்ன தெரியுமா

Published : Dec 17, 2021, 06:11 PM ISTUpdated : Dec 17, 2021, 06:22 PM IST
Santhanam New Movie: புதுவை முதல்வரை சந்தித்து ஆசி பெற்ற கையேடு சந்தானம் வைத்த முக்கிய கோரிக்கை! என்ன தெரியுமா

சுருக்கம்

நடிகர் சந்தானம் (Santhanam) நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, புதுச்சேரியில் துவங்கிய நிலையில், இன்று  புதுவை முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ஆசி பெற்ற கையோடு முக்கிய கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார்.  

நடிகர் சந்தானம் (Santhanam) நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, புதுச்சேரியில் துவங்கிய நிலையில், இன்று  புதுவை முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ஆசி பெற்ற கையோடு முக்கிய கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார்.

நடிகர் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த ஆண்டு மட்டும் 'பாரிஸ் ஜெயராஜ்', 'டிக்கிலோனா', 'சபாபதி' என மூன்று படங்கள் வெளியானது. இதை தொடர்ந்து இவர் தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் இன்று பூஜையுடன் துவங்கியது.

மேலும் செய்திகள்: Serial Actress Shabana: திருமணம் ஆன ஒரே மாதத்தில் ஆர்யன் - ஷபானா விவாகரத்தா? தீயாய் பரவும் காரணங்கள்!

 

இந்நிலையில் இன்று நடிகர் சந்தானம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்களை அவரது  அலுவலகத்திற்கு சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆசி பெற்றார். மேலும் தற்போது அவர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முழுவதும் புதுச்சேரியில் தான் படமாக்க பட உள்ளதாகவும், எனவே இதற்கு அரசு தரப்பு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், தயாரிப்பாளர்களின் நலன் கருதி படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகள்: Udhayanidhi new movie: ’நெஞ்சுக்கு நீதி..’ தாத்தாவின் டைட்டிலில் களமிறங்கும் பேரன்!! உதயநிதியின் கடைசி படமா?

சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி புதுவை முதல்வர் ரங்கசாமியை சந்தித்தபோது  படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது. இவரை தொடர்ந்து தற்போது சந்தானமும் இதே கோரிக்கையை வைத்துள்ளார். இதனை நிறைவு கூர்ந்த முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் தற்போது வெளியூர் சென்றுள்ளதாகவும் அவர் வந்த பிறகு புதுச்சேரியில் படப்பிடிப்புக்கான கட்டணம் கண்டிப்பாக குறைக்கப்படும் என உறுதியளித்தார்.

இதை தொடர்ந்து சந்தானம் செய்தியாளர்களிடம் பேசிய போது, இந்த திரைப்படம் புதுச்சேரியில் படமாக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இந்த படத்தில் நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக பிரபல நடிகை சுரபி நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!