Udhayanidhi new movie: ’நெஞ்சுக்கு நீதி..’ தாத்தாவின் டைட்டிலில் களமிறங்கும் பேரன்!! உதயநிதியின் கடைசி படமா?

By manimegalai aFirst Published Dec 17, 2021, 4:45 PM IST
Highlights

தமிழ் திரையுலகில், ஒரு தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்து, விநியோகஸ்தர், நடிகர், அரசியல்வாதி என பல்வேறு பரிமாணங்களோடு விளங்கும் உதயநிதி ஸ்டாலின். தன்னுடைய தாத்தாவின் டைட்டிலை கைப்பற்றி நடித்து வருவதால், இது தான் அவரது கடைசி படமா என்றும், இப்படத்திற்கு பின் முழுமையாக அரசியலில் கவனம் செலுத்துவாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழ் திரையுலகில், ஒரு தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்து, விநியோகஸ்தர், நடிகர், அரசியல்வாதி என பல்வேறு பரிமாணங்களோடு விளங்கும் உதயநிதி ஸ்டாலின். தன்னுடைய தாத்தாவின் டைட்டிலை கைப்பற்றி நடித்து வருவதால், இது தான் அவரது கடைசி படமா என்றும், இப்படத்திற்கு பின் முழுமையாக அரசியலில் கவனம் செலுத்துவாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று... தற்போதைய திமுக கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் அடுத்தடுத்து தங்களுடைய கருத்தை வெளிப்படுத்தி வருவது தான், விரைவில் சினிமா நடிப்புக்கு உதயநிதி முற்றுப்புள்ளி வைப்பாரா? என்கிற சந்தேகத்திற்கு இடம் கொடுத்துள்ளது. எனினும் தற்போது உதயநிதி இந்த வருடத்தில் மட்டும் அடுத்தடுத்து சுமார் 4 படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அந்த வகையில், இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் 'கண்ணை நம்பாதே', மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'ஏஞ்சல்', அருண் ராஜ் காமராஜ் இயக்கத்தில் 'நெஞ்சுக்கு நீதி' , மற்றும் மகிழ் திருமேனி இயக்கத்தில் இன்னும் பெயரிடாத படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்: Samantha: உடலோடு ஒட்டி இருக்கும் ஸ்கின் கலர் டைட் உடையில்... ஓப்பனாக தொடை அழகை காட்டி அதகளம் பண்ணும் சமந்தா!

 

இப்படி இவர் பல படங்களில் நடித்தாலும், இயக்குனர் அருண் ராஜ் காமராஜ் இயக்கத்தில் உதயநிதி போலீஸ் அதிகாரியாக நடித்து வரும், 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தின் பெயரே... அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்த டைட்டில் மறைந்த திமுக தலைவரும் ...  உதயநிதி ஸ்டாலினின் தாத்தாவுமான கருணாநிதி அவர்களின் புகழ்பெற்ற தலைப்புகளில் ஒன்று.

மேலும் செய்திகள்: Samantha item song: ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்ட சமந்தா.. கட்டவுட் வைத்து, பாலபிஷேகம் செய்த மகளிர் அமைப்பு!

 

கருணாநிதி தனது வாழ்க்கை குறித்த சுயசரிதையை புத்தகமாக எழுதி, 6 பாகங்களாக வெளியிட்டிருந்தார். இந்த புத்தகம் அரசியல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த புத்தகத்திற்கு 'நெஞ்சுக்கு நீதி' என்கிற தலைப்பை தான் சூட்டினார் கருணாநிதி. தற்போது இந்த புகழ்பெற்ற தலைப்பை தான் அவரது பேரன் தன்னுடைய படத்திற்கு வைத்துள்ளார். அதே போல் 1979 ம் ஆண்டு, நடிகர் ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான 'நெஞ்சுக்கு நீதி' என்கிற படத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான,கலைஞர் கருணாநிதி தான் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருந்தார். இந்த படம் பெரிய அளவில் பேசப்பட்டு சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: Pushpa: The Rise movie review: புஷ்பா படத்திற்கு கிடைக்கும் கலவையான விமர்சனங்கள்! ப்ளஸ் மற்றும் மைனஸ் என்னென்ன

 

இப்படி பல்வேறு சிறப்புக்கள் மிக்க தலைப்பை தான் தன்னுடைய படத்திற்காக கை பற்றியுள்ளார் உதயநிதி. இவர் நடித்து வரும் இப்படம் இந்தியில், நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிப்பில், அனுபவ் சின்ஹா இயக்கிய படம் 'ஆர்டிக்கிள் 15'. என்கிற படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய அரசியல் சாசனத்தில் உள்ள 15 வது சட்டப்பிரிவை குறிப்பிட்டு எடுக்கப்பட்டு வருகிறது. மதம், ஜாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியற்றிற்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்கும் சட்டப்பிரிவு இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: Pushpa Movie Review : எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா 'புஷ்பா'? ட்விட்டரை தெறிக்கவிடும் பிரபலங்களின் விமர்சனம்!

 

இந்த சட்டப்பிரிவை அடிப்படையாக கொண்டு நடந்த பல உண்மை சம்பவங்களை மையப்படுத்தி தான் 'ஆர்டிக்கிள் 15' படத்தின் கதை களத்தை அமைத்திருந்தனர். மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் நேர்மை... நீதி தவறாத போலீஸ் அதிகாரியாக உதயநிதி நடித்துள்ளார். இதுவரை இவர் நடிப்பில் வெளியான படங்களில் பார்த்ததை விட, இந்த படத்தில் மிகவும் வித்தியாசமானாக பிட்டான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் கெத்து காட்டியுள்ளார். ஏற்கனவே 'நெஞ்சுக்கு நீதி' படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த படத்தின் ஒர்கிங் போட்டோஸ் சிலவற்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

'சைக்கோ' படத்தை தொடர்ந்து, உதயநிதி நடித்துள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், விரைவில் இந்த படத்தின் டீசர், ட்ரைலர் குறித்த தகவல்களை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம், ஒரு வேலை உதியநிதி அமைச்சரானால், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பாரா? அல்லது திரைப்பட நடிப்புக்கு முற்று புள்ளி வைத்து விடுவாரா? என்கிற சந்தேக கேள்விகளுக்கு அவரே பதில் சொல்லும் வரை கார்த்திருப்போம்.

click me!