
நடிகர் விஜய்யின் 44 ஆவது பிறந்த நாளன இன்று, நடிகரும் அவருடைய நெருங்கிய நண்பருமான சஞ்சீவ் சில சுவாரஸ்ய நிகழ்வுகளை தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளார்.
லயோலா கல்லூரியில்...!
லயோலா கல்லூரியில் தொடங்கிய நடிகர் சஞ்சீவின் நட்பு இன்று வரை எந்த மாற்றமும் இல்லாமல் அவ்வளவு சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.
நிஜ வாழ்கையில் மட்டுமில்லை...படத்தில் கூட விஜய்க்கு மிக சிறந்த நண்பராக நடித்து இருப்பார் சஞ்சீவ்...
நடிகர் சஞ்சீவ் சின்னத்திரை ஹீரோவாகவும், ஒரு சில படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார்..இதற்கிடையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வெளிநாடு சென்று பல நிகழ்சிகளை தொகுத்து வழங்குவதில் மிகவும் பிசியாக உள்ளார்.
நடிகர் விஜய் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி பட்டய கிளப்புகிறார்.
இவர்கள் இருவருமே ஒவ்வொரு பக்கம் பிசியாக இருந்தாலும்,பிரண்ட்ஷிப் மட்டும் விட்டுக் கொடுக்காமல் முக்கிய நிகழ்வுகளில் ஆஜர் ஆகி விடுகின்றனர்
அந்த வகையில், நடிகர் விஜய் பிறந்த நாளான இன்று, அவருடைய 62 ஆவது படமான சர்க்கார் பற்றியும், பிறந்த நாளுக்காக வாழ்த்துக்களையும் தெரிவித்து உள்ளார் சஞ்சீவ்.
விஜய் பற்றி நடிகர் சஞ்சீவ் தெரிவிக்கும் போது.....
"விஜய் எபோதும் ரொம்ப சைலன்டா இருப்பார்....ஆனால் கேமரா முன்னாடி வந்துட்டா வேறு ஒரு விஜயை பார்க்கலாம்.
அவர் இப்படிஎல்லாம் நடிப்பார் என்று நாங்கள் கல்லூரியில் படிக்கும் போது நினைத்து கூட பார்த்தது இல்லை.....
இவ்வளவு பிசியா படத்தில் நடித்து வந்தாலும் இன்றளவும் 6 பேர் கொண்ட எங்கள் நட்பு வட்டாரம் மிக அழகாக சென்று கொண்டிருக்கிறது...
கல்லூரி வாழ்கையில் பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடந்துள்ளது..... இன்னும் சொல்லப்போனால், "ஏன்டா உங்கள மட்டும் ரேகிங் பண்றாங்க.. என்ன மட்டும் யாரும் கண்டுக்கவே மாற்றங்களேன்னு விஜய் சொல்வாராம்...காரணம் அந்த அளவிற்கு சைலன்ட்.
கல்லூரி படிக்கும் போதே அவர் ரொம்ப சைலன்ட்...இப்ப வரைக்கும் சைலன்ட் தான்.. ஆனால் கேமரா முன்னாடி வந்து நின்னா அவர் வேறு ஒரு விஜய்..
சர்க்கார் திரைப்படம் கண்டிப்பாக விஜய்க்கு மேலும் ஒரு மிக சிறந்த படமாக அமையும் என்றும், ஹேப்பி பர்த்டே டு மை டியர் நண்பன் விஜய்" என விஜய்க்கு வாழ்த்து கூறி விடைப்பெற்றார் நடிகர் சஞ்சீவ்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.