பிக் பாஸ் வீட்டில் மறுபடியும் ஒரு முத்தக்காட்சி; வேடிக்கையும் விவகாரமும் கலந்த லேட்டஸ்ட் பிக் பாஸ் ப்ரமோ;

 
Published : Jun 22, 2018, 10:26 AM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
பிக் பாஸ் வீட்டில் மறுபடியும் ஒரு முத்தக்காட்சி; வேடிக்கையும் விவகாரமும் கலந்த லேட்டஸ்ட் பிக் பாஸ் ப்ரமோ;

சுருக்கம்

another kiss scene in big boss house

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன், ஆரம்பம் முதலே சூடு பிடிக்க தொடங்கி விட்டது. சண்டை, கலாட்டா என தினம் ஒரு விதமாக வளர்ந்து வருகிறது இந்த பிக் பாஸ் 2. என்ன தான் சண்டை வந்தாலும், அது பிக் பாஸ் எதிர்பார்த்த அளவு பெரிய சண்டையாக வெடிக்காமல், புஸ்வானமாக போய்விடுகிறது. இதனால் பிக் பாஸும் புதிது புதிதாக பல டாஸ்குகளை, வித விதமாக தற்போது கொடுத்து வருகிறார்.

இன்றைய நிகழ்ச்சியிலும் அப்படி தான், மிகவும் விநோதமான டாஸ்கை கொடுத்திருக்கிறார் பிக் பாஸ். இதனை இன்றைய நிகழ்ச்சியின் பிரமோவை பார்க்கும் போதே தெரிகிறது. பாலாஜி மற்றும் மும்தாஜை குழந்தை போல மாற்றி, அந்த கதாப்பாத்திரத்துடன் ஒன்றி போக வைத்திருக்கிறார் பிக் பாஸ்.

பாலாஜியும் தவழும் குழந்தையாகவே மாறிவிட்டார். டயப்பர் சகிதம் வலம் வரும் அவரை பார்க்கும் போது, இன்றைய நிகழ்ச்சி நல்ல வேடிக்கையாக இருக்கும் என தெரிகிறது. அந்த வேடிக்கையை மிஞ்சும் படி ஒரு முத்த காட்சியும் இந்த பிரமோவில் இடம் பெற்றிருக்கிறது.

 

இதில் ஆண் வேடமனிந்திருக்கும் ஜனனி ஐயர், ஐஸ்வர்யா தத்திற்கு முத்தம் தருகிறார். ஏற்கனவே மருத்துவ முத்தத்திற்கு ஃபேமஸ் ஆன பிக் பாஸ் வீட்டில், இந்த முத்த காட்சிக்கு என்ன பெயர் வைத்து குறும்படம் காட்ட போகிறார்களோ? தெரியவில்லை.

இதெல்லாம் போதாதென பாலாஜி வேறு அவரது மனைவியின் கன்னத்தை கிள்ளி சீண்டுகிறார். இதுவுமா பிக் பாஸ் டாஸ்க்? என தெரியவில்லை. ஒட்டு மொத்த பிக் பாஸ்  போட்டியாளர்களையும் தலைகீழாக மாற்றி இருக்கும் இன்றைய டாஸ்க், நிச்சயம் செம எண்டர்டெயின்மெண்ட் ஆக இருக்க போகிறது என இந்த பிரமோவை பார்க்கும் போது தோன்றினாலும், எப்போது என்ன பூகம்பம் கிளம்புமோஎன ஒரு வித பயமும் வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பவன் கல்யாணுக்காக ராம் சரண் தியாகமா? ரிலீஸ் தேதியை மாற்றிய 'கேம் சேஞ்சர்' நாயகன்; ரசிகர்கள் கவலை!
பிக் பாஸ் வீட்டில் நாய் குறைக்க காரணம் என்ன? கண்ட்ரோல் பண்ண முடியாத பாரு, கம்ருதீன் செய்யும் சில்மிஷம்!